இந்திய அணியின் முக்கிய வீரருக்கு விரைவில் டும் டும் டும்; காதலியை கரம் பிடிக்கிறார் !! 1

இந்திய அணியின் முக்கிய வீரருக்கு விரைவில் டும் டும் டும்; காதலியை கரம் பிடிக்கிறார்

செர்பியாவில் பிறந்த மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான தனது நீண்டகால தோழி நடாசா ஸ்டான்கோவிச்சை கரம் பிடிக்கிறார் ஹர்திக் பாண்ட்யா.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. பாண்ட்யா அவரது காதலியான நடாவுடன் டேட்டிங் செய்து வருவதாக சில காலமாகவே தகவல்கள் சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஹர்திக் பாண்ட்யா இதுகுறித்து ஏதும் பேசாமல் மவுனம் காத்து வந்தார்.

இந்திய அணியின் முக்கிய வீரருக்கு விரைவில் டும் டும் டும்; காதலியை கரம் பிடிக்கிறார் !! 2

இந்நிலையில் நடிகை நடாசா ஸ்டான்கோவிச் உடனான தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். புத்தாண்டு தினத்தன்று ஹர்திக் பாண்ட்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியுடன் கைப்பிடித்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில், ‘‘எனது பட்டாசுடன் இந்த ஆண்டைத் தொடங்குகிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *