பொல்லார்ட்-இன் சாதனையை காலி செய்த ஹர்திக் பாண்டியா ; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 1
பொல்லார்ட்-இன் சாதனையை காலி செய்த ஹர்திக் பாண்டியா ; பாராட்டும் கிரிக்கெட் உலகம்..

ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்களை வீழ்த்திய ஆல்ரவுண்டர் பட்டியலில் மும்பை அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட்டின் சாதனையை குஜராத் தியேட்டர்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முறியடித்துள்ளார்.

 

ஐபிஎல் தொடரில் தோனியை போன்று மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்கிறார் என்ற பாராட்டைப் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா., கடந்த வருடம் போல இந்த வருடமும் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக தனது அணியை வழிநடத்து வருவதோடு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு அசத்தி வருகிறார்.

பொல்லார்ட்-இன் சாதனையை காலி செய்த ஹர்திக் பாண்டியா ; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 2

இந்த நிலையில் நடந்து முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா., 19 ரன்கள் அடித்ததன் மூலம் ஆல்ரவுண்டர் பட்டியலில் மிகப்பெரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

மிகக்குறைந்த வயதில் 2000 ரன்கள் மற்றும் 50 விக்கெட்களை வீழ்த்திய ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் மும்பை அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட்டின் சாதனையை முறியடித்து ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.

பொல்லார்ட்-இன் சாதனையை காலி செய்த ஹர்திக் பாண்டியா ; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !! 3

ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 2000 ரன்கள் மற்றும் 50 விக்கெட்களை கடந்த ஆல்ரவுண்டர் குறித்து காண்போம்..

  • ஷேன் வாட்சன் (3874 ரன்கள், 92விக்கெட்கள்) வயது – 33y,330 days.
  • கைரன் பொல்லார்ட் (3412 ரன்கள்,69 விக்கெட்கள்) வயது – 29y,332 days.
  • ரவீந்திர ஜடேஜா (2531 ரன்கள், 138 விக்கெட்கள்) 31y, 301 days.
  • ஜாக்கஸ் காலிஸ் (2427 ரன்கள், 65 விக்கெட்) வயது 37y, 177 days.
  • ஆண்ட்ரே ரசல் (2074 ரன்கள், 92 விக்கெட்டுகள்) வயது 34y, 15days.
  • ஹர்திக் பாண்டியா ( 2003 ரன்கள், 50 விக்கெட்டுகள்) 29y, 187 days).

 

சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் இடம் பெற்றிருக்கும் ஒரு வீரராக கருதப்படும் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா.,சர்வதேச அணிக்கு மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இப்படி ஒரு மகத்தான சாதனையை புரிந்துள்ளதை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் முன்பை விட அவரின் கிரிக்கெட் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றும் அவரை புகழ்ந்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *