ஹர்திக் பாண்டியா விராட் கோலிக்காக இதை செய்தே ஆக வேண்டும்; முன்னாள் வீரர் அஜித் அகார்கர் ஓபன் டாக் !! 1

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் விராட் கோலிக்கு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வால் தான் உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபமாக நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது இதன் காரணமாக இந்திய அணியில் பல வீரர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்திய அணியில் என்னென்ன மாறுபாடு செய்ய வேண்டும், எந்த வீரரை நீக்க வேண்டும் எந்த வீரரை தேர்வு செய்ய வேண்டும், எந்த தவறை செய்யக்கூடாது போன்ற கருத்துக்களை கிரிக்கெட் வல்லுநர்கள் தற்பொழுது அதிகமாக விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் ஹார்திக் பாண்டியா குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா விராட் கோலிக்காக இதை செய்தே ஆக வேண்டும்; முன்னாள் வீரர் அஜித் அகார்கர் ஓபன் டாக் !! 2

ஹார்திக் பாண்டியா 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டார் ஆனால் அந்த தொடரில் இவருக்கு காயம் ஏற்பட்டது இதனால் அதற்கு அடுத்தடுத்து நடைபெற்ற தொடர்களில் இந்திய அணிக்காக இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேலும் அதிரடி ஆல்ரவுண்டராக கருதப்படும் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்பொழுது பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார் காயம் காரணமாக பந்து வீச முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் தெரிவித்ததாவது, ஹார்த்திக் பாண்டியா மீண்டும் பந்துவீச துவங்குவார் என்று நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடர்களில் தற்பொழுது பந்து வீசவில்லை, ஆனால் சமீபமாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாத்திக் பாண்டியா மிக சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.எனவே வரும் காலங்களில் இவர் தனக்கு ஏற்பட்ட காயத்தை சரி செய்து விட்டு மீண்டும் பந்துவீச துவங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா விராட் கோலிக்காக இதை செய்தே ஆக வேண்டும்; முன்னாள் வீரர் அஜித் அகார்கர் ஓபன் டாக் !! 3

மேலும் அவர் கூறியதாவது, சமீபமாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் தட்டுத்தடுமாறி கொண்டிருந்தனர். அந்த இக்கட்டான நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மிகவும் கூலாக பந்துவீசினார். அவர் வீசிய அந்த 4 ஓவர்கள் இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டது. எனவே இவர் வரும் காலங்களில் பந்து வீச துவங்கவேண்டும்.இவரால் மட்டும் தான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு உதவ முடியும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *