வெளியே தலை காட்டாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் ஹர்திக் பாண்டியா !! 1

வெளியே தலை காட்டாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் ஹர்திக் பாண்டியா 

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தவறாக பேசியதன் மூலம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள ஹர்திக் பாண்டியா வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

 காஃப் வித் கரண் நிகழ்ச்சி சர்ச்சைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு என்ன அபராதம் என்பதை பிசிசிஐ பரிசீலித்து வருகிறது, இப்போதைக்கு இடைக்காலத் தடை உள்ளது.

வெளியே தலை காட்டாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் ஹர்திக் பாண்டியா !! 2

இந்நிலையில் மிட் டே பத்திரிகையில் ஹர்திக் பாண்டியா தந்தை ஹிமான்ஷு கூறும்போது, “ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பிறகு பாண்டியா வீட்டில்தான் இருக்கிறார், வெளியில் எங்கும் செல்வதில்லை. மேட்சை வீட்டில் அமர்ந்துதான் பார்த்தார்.  எந்த ஒரு போன்கால்களையும் அவர் எடுப்பதில்லை. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வெளியே தலை காட்டாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கும் ஹர்திக் பாண்டியா !! 3

குஜராத்தில் பொதுவிடுமுறை…ஹர்திக் பாண்டியா எப்போதும் பட்டம் விடுவார். ஆனால் இந்த முறை அதையும் தவிர்த்து விட்டார்.  இந்த முறை அவர் இதற்கெல்லாம் செல்லவில்லை காரணம் நிலைமை சரியில்லை. எந்த விழாவையும் கொண்டாடும் மன நிலையில் அவர் இல்லை.

சர்ச்சையினால் மிகவும் ஏமாற்றத்துடன் இருக்கிறார், நாங்கள் வீட்டில் இது பற்றி எதுவும் விவாதிப்பதில்லை, சகோதரர் குருணால் கூட ஹர்திக்கிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. பிசிசிஐ முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.

ஸ்ரீசாந்த் ஆதரவு;

பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான நடவடிக்கை குறித்து தடைவிதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சர்ச்சை குறித்து பேசுகையில், “அவர்கள் செய்தது தவறுதான். பாண்ட்யா, ராகுல் தவறாக பேசிவிட்டனர். ஆனால், மிகப்பெரிய தவறு செய்தவர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட்டில் மட்டும் அல்ல மற்ற விளையாட்டுகளிலும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் மீண்டும் அணிக்கு விரைவில் திரும்ப வேண்டும். ஏனெனில் உலகக் கோப்பை தொடர் நெருங்கிவிட்டது. பாண்ட்யா, ராகுல் இருவரும் திறமை வாய்ந்த வீரர்கள். வெற்றியை தீர்க்கும் வீரர்கள்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *