Cricket, Ms Dhoni, India, Hardik Pandya, Australia

நேற்று நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடயிளான முதல் ஒருநால் போட்டியில், பேட்டிங்க் செய்ய வந்த் ஹர்திக் பாண்டியா அவரது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய போது உபயோகப்படுத்திய கையுறையை அணிந்து வந்தார்.

அதற்கான காரணம் தெரியாமல் பலரும் புலம்பி வருகின்றனர். அந்த காரணத்தை ட்விட்டர் வாசிகளே ஆளுக்கொன்றாக சொல்லி வருகின்றனர் அந்த காரணத்தை தற்போது பார்ப்போம்.

ஒருவர் ஹர்திக் பாண்டிய தனக்கு இப்படிப்பட்ட வாழவை அளித்த் அமும்பை இந்தியஸ் அணிக்கு விஸ்வாசமாக இருக்க இப்படி மும்பை இந்தியன்ஸ் கையுறையுடன் வந்தாக கூறுகிறார்.

https://twitter.com/its_tabrez_4u/status/909363999325556736

சென்னை சூப்பர் கிங்க்ஸ் ட்விட்டர் பக்கம், பதிவிட்டதாவது

பாண்டிய மும்பை இந்தியன்ஸ் க்ளசில் விளையாடுகிறார், தோனி சென்னையில் விளையாடுகிறார். இருவரும் சேர்ந்து இந்திய அணிக்காக விளையாடுகின்றனர், இது தான் வேற்றுமையில் ஒற்றுமையாகும்

என பதிவிட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது.

ஹர்த்திக் பாண்ட்யா 66 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 83 ரன்னும், டோனி 88 பந்தில் 79 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), புவனேஷ்வர்குமார் 5 பவுண்டரியுடன் 32 ரன்னும் (30 பந்து) எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் க்ளவ்சை அணிந்திருந்த ஹர்திக்! காரணம் இது தான்!! 1
Indian cricketer Mahendra Singh Dhoni runs between the wickets during the first one day international (ODI) cricket match in the India-Australia series at the M A Chidhambaram stadium in Chennai on September 17, 2017. / AFP PHOTO / ARUN SANKAR / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும், பல்க்னெர், ஆடம் ஜம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

மழை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு 21 ஓவர்களில் 164 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது.

இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேக்ஸ்வெல் அதிக பட்சமாக 18 பந்தில் 39 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) பல்க்னெர் 25 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் க்ளவ்சை அணிந்திருந்த ஹர்திக்! காரணம் இது தான்!! 2

 

யசுவேந்திர சஹால் 3 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும், பும்ரா, புவனேஷ்வர்குமார் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

ஹர்த்திக் பாண்ட்யா ஆட்டநாயகான தேர்வு பெற்றார். இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தபோது மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன்.

ஆனால் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் டோனியும், கேதர் யாதவும் சிறப்பாக ஆடினார்கள்.

 

மும்பை இந்தியன்ஸ் க்ளவ்சை அணிந்திருந்த ஹர்திக்! காரணம் இது தான்!! 3
Indian cricket player Hardik Pandya, left celebrates with captain Virat Kohli, center and Kedar Jadhav after taking Steven Smith’s wicket during the first one-day international cricket match between India and Australia in Chennai, India, Sunday, Sept. 17, 2017. (AP Photo/Rajanish Kakade)

பின்னர் ஹர்த்திக் பாண்ட்யாவும், டோனியும் ஆட்டத்தை சிறப்பாக நிறைவு செய்தனர். மிடில் ஆர்டர் மற்றும் பின்கள மிடில் ஆர்டர் வரிசை வீரர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளனர்.

ஹர்த்திக் பாண்ட்யாவின் அதிரடியான ஆட்டம் போட்டியை மாற்றியது. அவர் 3 வகையான திறமைகளையும் (பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்) சமமாக பெற்றுள்ளார். அவர் நமக்கு கிடைத்தது அதிர்ஷ்டமே.

எங்களது பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. யசுவேந்திர சஹால் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு பந்துவீசினார். இதேபோல பும்ராவும், புவனேஷ்வர்குமாரும் நேர்த்தியாக வீசினார்கள்.

 

மும்பை இந்தியன்ஸ் க்ளவ்சை அணிந்திருந்த ஹர்திக்! காரணம் இது தான்!! 4

மழைக்கு பிறகு 20 ஓவர் போட்டி நிலை பந்துவீச்சில் ஏற்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு விராட்கோலி கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *