ரஷீத் கான்
சமகால கிரிக்கெட் தொடரின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ஆப்கானிஸ்தான் அணி நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஐபிஎல் தொடரில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த முறையில் விளையாடிய ரஷித் கான், 2022 ஐபிஎல் தொடருக்கான ஹைதராபாத் அணியில் தன்னை 15 கோடி கொடுத்து முதன்மை வீரராக தக்க வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார், இதனை ஹைதராபாத் அணி ஏற்றுக் கொள்ளாததால் ரஷீத் கானை ஐதராபாத் அணியில் தக்க வைக்க வில்லை.
இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கான ஆமதாபாத் அணியில் ரஷீத் கானை 15 கோடி கொடுத்து தனது அணியில் இணைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
