“ரொம்ப அமைதியானவர்.. ஆனா.. இவர் கேப்டன்சி தான் என் வாழ்க்கையே மாறியது” – ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!
இவர் கேப்டனாக இருந்தபோது கற்றுக்கொண்டது எனது வாழ்க்கையே மாற்றியது என மனம் திறந்து பேசியுள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.
2016ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ஹர்திக் பாண்ட்யா, தொடர்ந்து லிமிடேட் ஓவர் போட்டிகளில் இடம்பெற்றுவந்தார். 2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், 2018ஆம் ஆண்டிற்கு பிறகு, முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை.
உலககோப்பைக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்திக், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்றுவந்ததால் நீண்டநாட்களாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதற்கும் அவர்க்கு மாற்று வீரர்கள் சிலர் அணியில் இடம்பெற்றுவிட்டனர். இவரது இடம் கேள்விக்குறியாகியது.

Photo by: Faheem Hussain /SPORTZPICS for BCCI
இருப்பினும், சிகிச்சைக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் பயிற்சிக்கு திரும்பிய ஹர்திக், உள்ளூர் டி20 தொடரில் இரண்டு சதங்கள் விளாசி அனைவரையும் கவர்ந்து, மீண்டும் தென்னாபிரிக்க செல்லவிருந்த இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், இதுவரை ஹர்திக் பாண்டியா குறுகிய காலத்தில் பலதரப்பட்ட கேப்டன்களில் கீழ் ஆகியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா, சர்வதேச தொடர்களில் தோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரின் கீழ் ஆடியதில் யாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன் மற்றும் பழகுவதற்கு எளிது என்பன பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், “நான் முதன்முதலாக ஐபிஎல் தொடரில் ஆடியபோது எனக்கு பலவிதமாக உதவிகளை ரோகித் சர்மா செய்திருக்கிறார். நாங்கள் நிறைய பேசிக்கொள்ள மாட்டோம். இருப்பினும் அவருடன் ஆடுவது எனக்கு எளிமையாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்திய அணியில் ஆடுகையிவ் அவை எனக்கு உதவியிருக்கின்றன.” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஐ.பி.எல். தொடரில் எங்கள் மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங், என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். என்னை ஒரு குழந்தையை போல பாவித்த அவர், கிரிக்கெட் குறித்து நிறைய விஷயங்களை கற்றுத்தந்தார்.” என்றார்.