கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் செட்டாக மாட்டாங்க... இவர் தான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

தென் ஆப்ரிக்கா அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

சீனியர் வீரர்கள் பலருக்கு தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரிஷப் பண்ட் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 211 ரன்கள் குவித்த போதிலும், மோசமான பந்துவீச்சு காரணமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் செட்டாக மாட்டாங்க... இவர் தான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது.

இந்தநிலையில், இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான நடப்பு கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக், தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் செட்டாக மாட்டாங்க... இவர் தான் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

இது குறித்து பிராட் ஹாக் பேசுகையில், “சமகால கிரிக்கெட் உலகத்தின் தலைசிறந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னை பொறுத்தவரையில் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட்டை விட தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியா தான் சிறந்தவர். ஐபிஎல் தொடர் மூலம் ஹர்திக் பாண்டியா தன்னை நிரூபித்துவிட்டார். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் ஹர்திக் பாண்டியா தனது பங்களிப்பை மிக சரியாகவே செய்தார். ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், அதுவே இந்திய அணியின் எதிர்காலத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *