கேல்ரத்னா விருது எனக்கு வேண்டாம்.. நான் தகுதி இல்லை; சிஎஸ்கே வீரர் கூறியதன் பின்னணி இதுதான்! அவரே போட்ட ட்வீட்! 1

கேல்ரத்னா விருது எனக்கு வேண்டாம்.. நான் தகுதி இல்லை; சிஎஸ்கே வீரர் கூறியதன் பின்னணி இதுதான்! அவரே போட்ட ட்வீட்!

கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதி இல்லை என மாநில கிரிக்கெட் வாரியத்திடம் பரிந்துரையை திரும்பப்பெறச் சொல்லி கூறியிருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங். இதற்கான காரணம் இதுதான் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார்.

1998ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ஆப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், இந்திய அணிக்காக 2003, 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளின் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளார். 2007-ம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

கேல்ரத்னா விருது எனக்கு வேண்டாம்.. நான் தகுதி இல்லை; சிஎஸ்கே வீரர் கூறியதன் பின்னணி இதுதான்! அவரே போட்ட ட்வீட்! 2

15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த இவர், டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப் ஸ்பின்னர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணியில் இவர் இடம் பெறவில்லை என்றாலும், தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 2008 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக ஆடி வந்த இவர், 2018 ஆம் ஆண்டிலிருந்து மும்பை அணியின் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கேல்ரத்னா விருது எனக்கு வேண்டாம்.. நான் தகுதி இல்லை; சிஎஸ்கே வீரர் கூறியதன் பின்னணி இதுதான்! அவரே போட்ட ட்வீட்! 3

பல ஆண்டுகளாக இந்திய அணியில் உட்பட பல  கிரிக்கெட் போட்டிகளில் ஹர்பஜன் அளித்த பங்களிப்பை பாராட்டி பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு இவரது பெயரை பரிந்துரை செய்தது.

ஆனால் இந்த விருதுக்கு நான் தகுதி இல்லை எனக் கூறி பரிந்துரையை திரும்பப்பெற மாநில வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார் ஹர்பஜன். இவரது கோரிக்கையை எடுத்துக் கொண்ட பஞ்சாப் வாரியம் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரையை திரும்பப் பெற்றது. இதற்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஹர்பஜன்சிங்.

கேல்ரத்னா விருது எனக்கு வேண்டாம்.. நான் தகுதி இல்லை; சிஎஸ்கே வீரர் கூறியதன் பின்னணி இதுதான்! அவரே போட்ட ட்வீட்! 4

அவர் வெளியிட்டு ட்விட்டர் பதிவில், “கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் ஒருவரின் செயல்பாட்டை கணக்கில் கொண்டுதான் எந்தவொரு விருதும் வழங்கப்படும். அதன்படி பார்த்தால் நான் ‘கேல்ரத்னா’ விருதுக்கு தகுதியானவன் இல்லை. அதனால், எனக்கான பரிந்துரையை திரும்ப பெறும்படி பஞ்சாப் மாநில அரசை கேட்டுக்கொண்டேன். கோரிக்கையை ஏற்று பஞ்சாப் அரசு திரும்ப பெற்றதில் தவறு எதுவும் கிடையாது. இதில் யூகத்துக்கு இடமளிக்க வேண்டாம்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *