புதிய அவதாரம் எடுக்கிறார் இந்திய பெண்கள் டி.20 அணியின் கேப்டன்
இந்திய பெண்கள் டி.20 அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர், போலீஸ் டி.எஸ்.பியாக பதவியேற்க உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொகா மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர். இவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 171 ரன்கள் விளாசி, இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.
இதையடுத்து ஹர்மன்பிரீத்தை கௌரவிக்கும் வகையில், டி.எஸ்.பி பதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் தெரிவித்தார்.

தற்போது மேற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அங்குள்ள ஒப்பந்தத்தை மீறி, வேறு பணியில் சேர முடியாமல் இருந்தது.
இந்நிலையில் ஹர்மன்பிரீத்தை பணியில் இருந்து விடுவிக்க, ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. இதையடுத்து விரைவில் டி.எஸ்.பியாக பதவியேற்க உள்ளார்.
தற்போது தென்னாப்பிரிக்காவில் நடக்கும் டி20 தொடரில் பங்கேற்றுள்ளதால், வரும் மார்ச் 1ம் தேதி டி.எஸ்.பியாக பதவியேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இருந்தே அபாரமாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவூர், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.