உடற்பயிற்சி சோதனையில் இரண்டு நாளில் இரண்டு முறை தேர்வடையாததால் இங்கிலாந்தில் இருந்து சொந்த நாடான பாகிஸ்தானுக்கு சென்றார் உமர் அக்மல். இதனால், அவர்க்குக்கு பதிலாக ஹரிஸ் சொஹைல் என்னும் வீரரை சேர்த்துள்ளனர்.
மூத்த தேர்வாளரான இன்சமாம் உல்-அக், உமர் அக்மலுக்கு பதிலாக ஹரிஸ் சொஹைல் அல்லது உமர் அமின் தான் அணியில் சேர்க்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது, பார்மில் இருக்கும் ஹரிஸ் சொஹைலை சேர்த்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அணிக்கு திரும்பி வந்த கம்ரான் அக்மலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஆனால், தேர்வாளர்கள் அவரை கண்டு கொள்ள வில்லை.
“NCA பயிற்சியாளரிடம் மூன்று வீரர்கள் உடற்பயிற்சி சோதனைக்கு சென்றனர். அந்த பயிற்சியாளர் கொடுத்த அறிக்கை படி, சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கான பாகிஸ்தான் அணியில் உமர் அக்மலுக்கு பதிலாக ஹரிஸ் சொஹைலை சேர்த்துளோம்,” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது.
6 வருடம் கழித்து கடைசியாக லாஹூரில் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடினார் ஹரிஸ் சொஹைல்.
பாகிஸ்தான் கோப்பையில் 5 போட்டியில் 236 ரன் அடித்து சிறப்பாக விளையாடினார். ஆனால் இறுதி போட்டியில் 1 ரன்னுக்கு அவுட் ஆனார். சமி அஸ்லாம் சதம் அடிக்க இறுதி போட்டியில் 324 ரன்னை சேஸ் செய்தது.
வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது பாகிஸ்தான் அணியுடன் ஹரிஸ் சொஹைல் இணைவார் என எதிர்பார்க்க படுகிறது.
மினி உலக கோப்பை என கருத படும் சாம்பியன்ஸ் ட்ராப்பியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டி ஜூன் 1-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. தனது முதல் போட்டியில் ஜூன் 4-ஆம் தேதி இந்தியாவுடன் மோத போகிறது பாகிஸ்தான் அணி.