கிரிக்கெட் உலகின் புகழ்பெற்ற வர்ணனையாளரும் தொகுப்பாளருமான ஹர்ஷா போக்லே வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரஷீத் கானுக்கு பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டார். அதற்கு ரஷீத் கான் ரிப்ளை செய்ய ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
19 வயதாகும் ரஷீத் கான் தனது சுழற்பந்து வீச்சால் உலகையே தன் வசம் ஈர்த்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தனது முதல் தொடரை வென்றது.
இதில், ரஷீத் கான் 3 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். இதுகுறித்து, ரஷீத் கான் கூறுகையில், இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட ஆவலாக உள்ளேன் என தெரிவித்தார்.
இதற்கு பல நாடுகளில் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. ஹர்ஷா போக்லே இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
Meanwhile @rashidkhan_19 has defended 9 off the last over to give Afghanistan a clean sweep over Bangladesh. Amazing result for Afghanistan and further proof of Rashid's phenomenal development
— Harsha Bhogle (@bhogleharsha) June 7, 2018
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷீத் கான் “தேங்க்யூ ப்ரோ” என ரிப்ளை செய்ய, அங்கு ஆரம்பித்தது ட்விட்டர் ரகளை.
Thank you bro
— Rashid Khan (@rashidkhan_19) June 7, 2018
தற்போது ஹர்ஷா போக்லே வயதை 56, ரஷீத் கானின் வயது 19.. இருவருக்கும் உள்ள வயது வித்தியாசத்தை சுட்டி காட்டி கலாய்க்க ஆரம்பித்து விட்டனர் ட்விட்டர் வாசிகள்.
Hey @rashidkhan_19, no problem with the "bro" bit. Go for it! Looking forward to catching up in Bengaluru!
— Harsha Bhogle (@bhogleharsha) June 9, 2018
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எனக்கு இதில் எந்த ஒரு வருத்தமும் இல்லை. இதை விவாதம் செய்யும் அளவிற்கு எந்த ஒரு சுவரஷ்யமும் இல்லை என மறு ட்வீட் செய்தார்.