விராட் கோலியின் சாதனைகளை முறியடிப்பதே தன்னுடைய வேலையாக வைத்து கொண்டிருக்கிறார் தென்னாபிரிக்காவின் ஹசிம் ஆம்லா. மே 29ஆம் அன்று விராட் கோலியை முந்தி ஒருநாள் போட்டியில் 7000 ரன் அடித்த வேகமான வீரர் என்ற பெருமையை தட்டி சென்றார் ஹசிம் ஆம்லா. 153 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ள ஹசிம் ஆம்லா, ஒருநாள் போட்டியில் 2000, 3000, 4000, 5000, 6000 ரன் அடித்த வேகமான வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
லார்ட்ஸில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 3 ரன் அடித்த போது, இந்த சாதனையை முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் 7000 ரன் அடித்த விராட் கோலி 161 இன்னிங்ஸ் எடுத்துக்கொண்டார், ஆனால் ஹசிம் ஆம்லா 150 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துள்ளார். மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 117-ரன் அடித்த போது, இந்த சாதனையை சொந்தமாக்கினார்.
தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.
3வது ஒருநாள் போட்டியில் 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா. நம்பர் 1 அணியான தென்னாபிரிக்கா அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்று, தொடரை இழந்தது. ஆனால், சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக வெற்றி பெற்று தெம்பாக விளையாடும் என எதிர்பார்க்க படுகிறது.