மிகவும் கடினமான பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி தான் : பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்!! 1
Indian cricket captain Virat Kohli celebrates scoring a century during the fourth day's play of the first test cricket match between India and Sri Lanka in Galle, Sri Lanka, Saturday, July 29, 2017. (AP Photo/Eranga Jayawardena)

இந்தியாவின் மீதான தனிப்பட்ட எதிர்ப்பையும் தான் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாசன் அலி, விராட் கோஹ்லியை நான் எதிர்கொண்டத்திலேயே மிகவும் கடினமான பேட்ஸ்மேனாக இருந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிய வேக பந்துவீச்சாளர் ஹசன் அலி, கேட்கப்படும் கேள்விகளுக்கு தனது பதில்களை தனக்கு சொந்தமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவர் அதில் தனக்கு விருப்பமான பலவற்றை கூறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

Cricket, Sri Lanka, Pakistan, Whitewash

நவீன கிரிக்கெட்டின் கடினமான பேட்ஸ்மேனைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று அவரிடம் கேட்டபோது, ​​பாகிஸ்தான் வீரர் கண்ணை மூடிக்கொண்டு மாற்று கருத்தின்றி விராத் கோஹ்லி என பதில் அளித்துள்ளார்.

மிகவும் கடினமான பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி தான் : பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்!! 2

ஹாசன் அலி பாக்கிஸ்தானிற்க்கு உருவெடுத்து வரும் அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார். குறிப்பாக, 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து மீண்டு வந்து தொடரை கைப்பற்றியது. அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய பங்காற்றியது ஹாசன் அலி ஆவார். மேலும், அவரின் சிறப்பான பந்துவீச்சுக்கு தொடர் நாயகன் விருதும் கிட்டியது.

சாம்பியன்ஸ் தொடரில் 5 போட்டிகளில் ஆடி 13 விக்கெடுகளை வீழ்த்தி எதிரணியை நிலைகுலைய செய்ததற்கு இந்த விருது ஹாசன் அலிக்கு வழங்கப்பட்டது.

Cricket, Pakistan, Sarfraz Ahmed

இது தவிர, போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பிறகு விரைவில் அவர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
சமீபத்திய பிசிபி விருதுகளில், பாகிஸ்தானின் மிகச்சிறந்த ஒருநாள் சர்வதேச பந்து வீச்சாளர் என்ற பெயரைப் பெற்றார். இதனால், ஹாசன் அலி அவரது ‘ஜெனரேட்டர் கொண்டாட்டம்’ காரணமாக பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்தில் இடம்பெற்றார்.

விராட் கோஹ்லியை கடினமான பேட்ஸ்மேனாக பெயரிடப்பட்டதோடு, ஹசன் அலி இங்கிலாந்தின் ஜோ ரூட், விராட் கோலி மற்றும் பாபர் ஆஸம் ஆகியோர் இந்த சகாப்தத்தின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் என்று உணர்ப்படுகின்றனர் என தெரிவித்தார்.

மிகவும் கடினமான பேட்ஸ்மேன் விராத் கோஹ்லி தான் : பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்!! 3
DUBAI, UNITED ARAB EMIRATES – OCTOBER 13: Hasan Ali of Pakistan looks on during the first One Day International match between Pakistan and Sri Lanka at Dubai International Stadium on October 13, 2017 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

அவர் எதிர்வரும் ஆசியா கோப்பையிலும், அதற்கு அடுத்ததாக வரும் தொடரின் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியைப் பற்றி கேட்ட ரசிகர்களுக்கு அதற்கும் அற்புதமாக பதிலளித்தார்.

விராட் கோஹ்லி மற்றும் பாபர் ஆஸம் ஆகியோரில் யார் சிறந்தவர் என்பது பற்றி ரசிகர் ஒருவர் கேட்டபோது, ​​ஹசன் அலி அந்தக் கேள்வியைத் தவிர்த்தார். அவர் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறி விடைபெற்றார்.

இங்கே ட்வீட் இணைப்பு:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *