உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வருகிற வெள்ளிக்கிழமை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணி தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது அது விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணி பயிற்சி ஆட்டங்கள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து வீரர்களும் மனதளவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு விளையாட தயாராகியுள்ள நிலையில் ரவிசந்திரன் அஸ்வின் தற்போது செய்தியாளர் சந்திப்பில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நியூசிலாந்து பலமான அணியாக களம் இறங்கும்
இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்த பின்னர் எங்களுடன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி விளையாட இருக்கிறது. எனவே அந்த அணி சற்று பலமாக களம் இறங்கும், இரண்டு போட்டிகளில் விளையாடி முடித்து விட்ட காரணத்தினால் என்ன செய்ய வேண்டும் என்கிற இப்டி அந்த அணிக்கு ஓரளவுக்கு புரிந்திருக்கும்.
நிச்சயமாக இந்திய அணி நியூசிலாந்து அணியை வெற்றிபெற கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்றும், மனதளவில் உறுதியுடன் இந்திய அணி செயல்பட்டால் மட்டுமே நியூசிலாந்து அணியை வெல்ல முடியும் முடியும் என்றும் அஷ்வின் தற்போது கூறியுள்ளார்
இங்கிலாந்தில் மேகங்களை தான் கவர் செய்ய வேண்டும்
இங்கிலாந்தில் வானிலை எப்பொழுதும் ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே ஒரு அணிக்கு எதிராக செயல்படும் போது வானிலை உடைய தட்ப நிலை குறித்து நன்கு அறிந்து விளையாட வேண்டும். மேகங்கள் சூழ்ந்து இருக்கும் பட்சத்தில் மைதானம் ஒரு மாதிரியாக செயல்படும், அதே சமயம் மேகங்கள் கலைந்து செல்லும் வேளையில் வேறு மாதிரியாக மைதானங்கள் செயல்படும்.
இவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்திய அணி விளையாட வேண்டி இருக்கும் என்றும், தற்பொழுது அனைத்து இந்திய அணி வீரர்களும் சிறப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற வெள்ளிக்கிழமை இந்திய நேரத்தில் 3:30 மணிக்கு ஆரம்பமாகும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.