இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பும்ராஹ்வும் இவர் தான்... முகமது ஷமியும் இவர் தான்; இளம் வீரர்ரை புகழ்ந்து பேசிய ஆர்.பி சிங் !! 1
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பும்ராஹ்வும் இவர் தான்… முகமது ஷமியும் இவர் தான்; இளம் வீரர்ரை புகழ்ந்து பேசிய ஆர்.பி சிங்

இந்திய அணியின் அடுத்த முகமது சமி இந்த வேகப்பந்துவீச்சாளர் தான் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆர்.பி சிங் தெரிவித்துள்ளார்.

2021 ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் மிகவும் மோசமாக செயல்பட்டு நெட்டிசன்களின் செல்லப் பிள்ளையாக திகழ்ந்த இந்திய அணியின் இளம் வேக பந்துவீச்சாளர் முகமது சிராஜ், 2021 ஐபிஎல் தொடருக்கு மேல் ஒட்டுமொத்த இந்திய அணியிலிருந்தும் புறக்கணிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவராக வலம் வந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பும்ராஹ்வும் இவர் தான்... முகமது ஷமியும் இவர் தான்; இளம் வீரர்ரை புகழ்ந்து பேசிய ஆர்.பி சிங் !! 2

ஆனால் இவருடைய கடுமையான பயிற்சி மற்றும் முயற்சியின் மூலம் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து மிகச் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் தொடரின் ரெகுலர் வீரர்களில் ஒருவராக வலம்வரும் முகமது சிராஜ்,தற்பொழுது லிமிடெட் தொடரிலும் மிகச் சிறப்பாக பந்து வீசி அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகிறார்.

குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடி பத்து போட்டிகளில் 15 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் நிற தொப்பியை பெரும் பந்துவீச்சாளர்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கும் முகமது சிராஜை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பும்ராஹ்வும் இவர் தான்... முகமது ஷமியும் இவர் தான்; இளம் வீரர்ரை புகழ்ந்து பேசிய ஆர்.பி சிங் !! 3

பும்ரா மற்றும் முகமது சமியை ஓவர்டேக் செய்யும் திறமை சிராஜிடம் உள்ளது..

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் ஆர்.பி சிங்., மிகச் சிறப்பாக பந்து வீசும் முகமது சிராஜ் இந்திய அணியின் அடுத்த முகமது சமியாக வலம் வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தன்னுடைய பாராட்டை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பும்ராஹ்வும் இவர் தான்... முகமது ஷமியும் இவர் தான்; இளம் வீரர்ரை புகழ்ந்து பேசிய ஆர்.பி சிங் !! 4

இது குறித்து ஆர்.பி.சிங் தெரிவித்ததாவது.,“நான் நீண்ட காலமாகவே சிராஜை கவனித்து வருகிறேன், அவர் இந்திய அணியில் சேர்ந்த பொழுது அவருடைய Graph உச்சத்தில் இருந்தது, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கினாலும் அவர் தன்னுடைய உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தி தற்பொழுது மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். டெக்னிக்கலாக பார்த்தால் அவர் தன்னுடைய மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசுவதில் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளார். அவரால் பவுன்சர் பந்துகளையும் ஸ்டெம்புக்கு நேராக வீசும் பந்துகளையும் மிக சிறப்பாக வீச முடியும். நிச்சயம் அவர் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவிர்க்கு மாற்று வீரராக செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது, இன்னும் சொல்லப்போனால் முகமது சிராஜின் பார்ம் அதிகரித்தால் நிச்சயம் அவர் இந்திய அணியின் அடுத்த முகமது சமியாக திகழ்வார்” என முகமது சிராஜை ஆர்பி சிங் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *