ரிஷப் பண்ட் இல்லை… இந்த நான்கு வீரர்களும் வேற லெவல்; புகழ்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா !! 1

தற்போதுள்ள இந்திய அணியில் தன்னை கவர்ந்துள்ள இளம் வீரர்கள் யார் யார் என்பதை சுரேஷ் ரெய்னா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சச்சின், சேவாக் அவுட்டாகிவிட்டால் அவ்வளவு தான் மற்ற வீரர்களால் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தர முடியாது என்ற நிலைமை தற்பொழுது தலைகீழாக மாறிவிட்டது. கடந்த ஓரிரு வருடங்களாக இந்திய அணி பெற்ற அனைத்து வெற்றியிலும் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களின் பங்களிப்பு பெரிதும் உள்ளது.

ரிஷப் பண்ட் இல்லை… இந்த நான்கு வீரர்களும் வேற லெவல்; புகழ்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா !! 2

ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், நடராஜன், ஷர்துல் தாகூர் என பல திறமையான இளம் வீரர்கள் இறுதி வரை இந்திய அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். இளம் வீரர்கள் பலரின் நம்பிக்கையான ஆட்டத்தின் காரணமாகவே இந்திய அணி தற்போது கிரிக்கெட் உலகின் வல்லரசாக திகழ்ந்து வருகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ராஹ் போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டாலும் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என உறுதியாக சொல்லும் அளவிற்கு பல இளம் வீரர்கள் இந்திய அணியில் தங்களுக்கான வாய்ப்பிற்காக நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.

ரிஷப் பண்ட் இல்லை… இந்த நான்கு வீரர்களும் வேற லெவல்; புகழ்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா !! 3

எதிர்கால இந்திய அணியும் வலுவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா, தற்போதைய இந்திய அணியில் தனக்கு பிடித்த இளம் வீரர்கள் யார் யார் என்பதனை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

ரிஷப் பண்ட் இல்லை… இந்த நான்கு வீரர்களும் வேற லெவல்; புகழ்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா !! 4

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “கர்நாடகாவை சேர்ந்த தேவ்தத் படிக்கல், மகாராஷ்டிராவை சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜாவிற்கு பதிலாக ஆடிய அக்ஸர் படேல் ஆகிய மூவரும் என்னை வெகுவாக கவர்ந்தனர். அக்ஸர் படேல் கடுமையாக பயிற்சி செய்து தன்னைத்தானே வளர்த்துக்கொண்டுள்ளார். தொடர்ந்து பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட்டை இனி இளம் வீரர்கள் பட்டியலில் சேர்ப்பதே தவறு, அவர் தற்பொழுது இந்திய அணியின் சீனியர் வீரர். அதே போல் முகமது சிராஜும் மிக சிறப்பாக பந்துவீசிகிறார். முகமது சிராஜ் உள்பட இந்திய இளம் வீரர்கள் பலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதற்கு இளம் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தான் முக்கிய காரணம். இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கு உரிய பாராட்டுக்கள் அனைத்தும் ராகுல் டிராவிட்டையே சாரும்” என்று தெரிவித்துள்ளார்.

ரிஷப் பண்ட் இல்லை… இந்த நான்கு வீரர்களும் வேற லெவல்; புகழ்ந்து பேசிய சுரேஷ் ரெய்னா !! 5

மேலும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, ப்ரியம் கர்க், கர்ன் சர்மா, அபிசேக் ஷர்மா மற்றும் சச்சின் பேபி ஆகியோரும் தன்னை பெரிதும் கவர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *