“ரகானே ஸ்லோவாக ஆடுகிறார் அதனால் அணியில் வேண்டாம்” என்று அப்போது சொன்ன அதே தோனி, இப்போது ஐபிஎல் அணியில் எதுக்காக எடுத்தார், ஆடவைக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சேவாக்.
அஜிங்கிய ரகானே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மினி ஏலத்தில் 50 லட்சம் கொடுத்து சிஎஸ்கே அணிக்கு எடுக்கப்பட்டார். முதல் இரண்டு லீக் போட்டிகளில் அவரை விளையாட வைக்கவில்லை.

மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோர் இல்லாததால் ரகானே-க்கு பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்பட்டது. இப்போட்டியில் எவருமே எதிர்பார்க்காத அளவிற்கு 19 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சீசனின் அதிவேக அரைசதமாக பதிவு செய்தார்.
ரகானே 27 பந்துகளில் 61 ரன்கள் அடித்து பலரையும் மிரளவைத்தப்பின் ஆட்டமிழந்தார். இவரது ஆட்டம்தான் சென்னை அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து வெற்றிக்கு உதவியது.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கு லிமிட்டட் ஓவர்களில் முன்னணி வீரராக இருந்து வந்த ரகானே, அதன் பிறகு அப்போதைய கேப்டனாக இருக்க தோனியால் வெளியில் அனுப்பப்பட்டார். அடுத்து வந்த விராட் கோலியும் ரகானேவை அணியில் எடுப்பதற்கு முனையவில்லை. “மிகவும் ஸ்லோவாக இருக்கிறார்.” இதனால் தான் அவர் எடுக்கப்படவில்லை. என்ற காரணத்தையும் தோனி கூறினார். இந்த நிகழ்வை குறிப்பிட்டு,
தனது விமர்சனத்தை முன்வைத்த முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், “அப்போது ஸ்லோவாக இருக்கிறார் என்று அணியிலிருந்து வெளியே அனுப்பிய தோனி, இப்போது ரகானே-விடம் என்ன கண்டார்? ஏன் அவரை உலகில் அணியில் வைத்து விளையாட வைக்கிறார்?. அப்போதும் இப்போதும் தோனி தான் கேப்டன் அதனாலே இதை கேட்கிறேன்.” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

ரகானே குறித்து தோனி பேசுகையில், “ரகானே சிஎஸ்கே அணி எடுக்கப்பட்ட பிறகு அவரிடம் பேசினேன். உன்னிடம் இருந்து எனக்கு இதுதான் வரவேண்டும். வேறு எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். மைதானத்திற்குள் இறங்கி என்ஜாய் செய்யலாம். என்ன நடந்தாலும் அணி நிர்வாகம் உனக்கு பக்கபலமாக இருக்கும். நானும் பக்கபலமாக இருப்பேன்.” என்றார்.