தற்போது ராகுல் ட்ராவிட் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே அனைவரும் காத்துக் கொண்டுள்ளனர்; முன்னாள் வீரர் பேட்டி !! 1

சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்தத் தொடர் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிர்க்கு விஷப்பரீட்சையாகும், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதிந்தர் சோதி பேட்டி.

சவுத் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து ரசிகர்களும் இந்திய அணி சவுத்ஆப்பிரிக்கா மைதானத்தில் எவ்வாறு விளையாடும் என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக காத்துக் கொண்டுள்ளனர்.

தற்போது ராகுல் ட்ராவிட் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே அனைவரும் காத்துக் கொண்டுள்ளனர்; முன்னாள் வீரர் பேட்டி !! 2

தற்போது இந்திய அணி பல்வேறுவிதமான சர்ச்சைகளால் திணறி வரும் நிலையில் இந்திய அணி குறித்தும் சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் குறித்தும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கும் பேட்டியில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரிதிந்தேர் சோதி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து பேசியுள்ளார்.

தற்போது ராகுல் ட்ராவிட் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே அனைவரும் காத்துக் கொண்டுள்ளனர்; முன்னாள் வீரர் பேட்டி !! 3

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின்கீழ் செயல்பட்ட இந்திய அணி ஐசிசி தொடரில் வெற்றி பெறவில்லை என்பதற்காக ரவிசாஸ்திரியை அணியிலிருந்து நீக்கிவிட்டு புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமித்தது, இதன் காரணமாக ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் சவுத் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி எவ்வாறு விளையாடும் என்பதை ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் வட்டாரமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று பெரும்பாலான வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ரித்விந்தர் தனது பேட்டியில், தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்திய அணியை ராகுல் டிராவிட் வழி நடத்துவது என்பது விஷப்பரீட்சையாகும்,முன்பு போல் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழும் ஆனால் தற்பொழுது அந்த நிலமையில்லை. இதனால் ராகுல் டிராவிட் இந்த பிரச்சினையை முதலில் சரி செய்ய வேண்டும். மேலும் சவுத் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சில் மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதால் ராகுல் டிராவிட் இதனை எவ்வாறு அணுகுவார் என்பதை பார்ப்பதற்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது என்று சோதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *