"இனி இவரே கேப்டனாக இருக்கட்டும்... அதான் கரெக்ட்" பிரபலம் சொன்ன கருத்தால் ரசிகர்கள் வம்படி! 1

“இனி இவரே கேப்டனாக இருக்கட்டும்… அதான் கரெக்ட்” பிரபலம் சொன்ன கருத்தால் ரசிகர்கள் வம்படி!

இந்திய அணிக்கு கோஹ்லி மட்டும் கேப்டனாக இருந்தால் போதும். ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் தேவையில்லை என பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்த கருத்தால் ட்விட்டரில் ரசிகர்கள் வம்படி சண்டை செய்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட்டில் மூன்று வித அணிக்கும் கோஹ்லி கேப்டனாக உள்ளார். ஆனால், கேப்டன் பொறுப்பை பகிர்ந்து தர வேண்டும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கோஹ்லியும் டி20 அணிக்கு ரோகித் இருக்கவேண்டும் என அவ்வப்போது விமர்சனம் எழுந்து வருகிறது.

"இனி இவரே கேப்டனாக இருக்கட்டும்... அதான் கரெக்ட்" பிரபலம் சொன்ன கருத்தால் ரசிகர்கள் வம்படி! 2

இதுகுறித்து பிரபல கிரிக்கெட் விமர்சகர் மற்றும் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தனது கருத்தினை வெளியிட்டிருக்கிறார்.

அவர் கூறியதாவது, “ஒரு அணியின் கேப்டனாக இருப்பவர், அந்த வகை போட்டிகளில் மட்டும் தான் பங்கேற்க வேண்டும் என்று கூறுவது எப்போதும் தவறானது. என்னைப் பொறுத்தவரையில் இதை ஏற்க மாட்டேன்.

இந்திய அணிக்கு கோஹ்லி, ரோகித் என இருவரையும் கேப்டனாக்க வேண்டும் என பேசுகின்றனர். இதில் கோஹ்லியை பார்த்தால், கேப்டனாக வேண்டும் என்றே இவர் பிறந்துள்ளார் போல உள்ளது. இந்த இடம் எனக்கு மட்டும் தான் சொந்தமாக இருக்க வேண்டும் என தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு சொல்வதற்கு பிறந்துள்ளார் போலத் தெரிகிறது.

"இனி இவரே கேப்டனாக இருக்கட்டும்... அதான் கரெக்ட்" பிரபலம் சொன்ன கருத்தால் ரசிகர்கள் வம்படி! 3

ஒருவேளை கோஹ்லி, ரோகித் என தனித்தனியாக கேப்டன்களை நியமித்தால் எப்படி இருக்கும் என எனக்குத் தெரியவில்லை. ரோகித் மும்பை அணி கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் என நினைக்கிறேன்.  அணியில் கோஹ்லி இல்லாத நேரங்களில் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்கு ஒரு கேப்டன் மட்டும் இருக்க வேண்டும். இது தான் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

"இனி இவரே கேப்டனாக இருக்கட்டும்... அதான் கரெக்ட்" பிரபலம் சொன்ன கருத்தால் ரசிகர்கள் வம்படி! 4

ஹர்ஷாவின் இந்த கருத்துக்கு ட்விட்டர் போன்ற வலைதளபக்கங்களில் ரசிகர்கள் பலர் சண்டையிட்டு வருகின்றனர். குறிப்பாக ரோகித் ஷர்மாவின் பிறந்தநாள் அன்று இவர் இப்படி சொன்னது மேலும் தூண்டிவிட்டது போல ஆனது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *