உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இவர் நிச்சயமாக 200 அடிப்பார் - பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் கணிப்பு !! 1

பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கணெரியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா நிச்சயமாக 200 அடிப்பார் என்று தற்பொழுது கணித்துள்ளார். மேலும் விராட் கோலியுடன் ரோகித் சர்மா டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேன் என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து மைதானம் அவருக்கு சாதகமாக இருக்கும்

இதுபற்றி தற்பொழுது பேசியுள்ளார் அவர் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டியில் அவருக்கு மூன்று இரட்டை சதம் உள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அவர் ஒரே ஒரு இரட்டை சதம் மட்டுமே குவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இவர் நிச்சயமாக 200 அடிப்பார் - பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் கணிப்பு !! 2

என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் நிச்சயமாக தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை டெஸ்ட் போட்டியில் குவிப்பார் என்று கூறியுள்ளார். இங்கிலாந்து மைதானம் அவருக்கு நல்ல படியாக கைகொடுக்கும். ஆஸ்திரேலியாவில் அவர் ரன்கள் அவ்வளவாக அடிக்கவில்லை. ஆனால், நிச்சயமாக இங்கிலாந்தில் அவர் தன்னுடைய திறமையை காண்பிப்பார் என்று கூறியிருக்கிறார்.

விராட் கோலியை விட டெக்னிக்கலாக ரோகித் சர்மா ஸ்மார்ட் பேட்ஸ்மேன்

விராட் கோலி உலக தரவரிசையில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால் முக்கியமான போட்டிகளில் மிகப்பெரிய ஸ்கோர் அடிப்பது என்று வந்துவிட்டால் அதில் ரோகித் சர்மா கைதேர்ந்தவர் மேலும் டெக்னிக்கலாக ரோகித் சர்மா விராட் கோலியை விட சிறப்பான பேட்ஸ்மேன். என்னைப் பொறுத்தவரையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலியை விட ரோகித் சர்மா முக்கிய வீரராக காணப்படுவார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இவர் நிச்சயமாக 200 அடிப்பார் - பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் கணிப்பு !! 3

டெஸ்ட் போட்டியில் ஓபனிங் வீரராக களம் இறங்கியது முதல் இன்றுவரை இந்திய அணிக்காக மிக சிறப்பாக விளையாடிக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சென்னையில் அவர் அடித்த 161 ரன்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. எனவே அதுபோல ஒரு மிகப் பெரிய ஸ்கோரை நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அடித்து இந்திய அணிக்கு பலம் சேர்ப்பார் என்று கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *