இவருக்கு என்ன ? நல்ல தான் இருக்காறு ; அடுத்த போட்டியில கண்டிப்பாக விளையாடுவார் ! - ரஹானே உறுதி ! 1

இவருக்கு என்ன ? நல்ல தான் இருக்காறு ; அடுத்த போட்டியில கண்டிப்பாக விளையாடுவார் ! – ரஹானே உறுதி !

இந்தியா மற்றும் ஆஸ்திரெலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சிறப்பாக நடைபெறு வருகிறது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

நேற்று நிற்க கூட முடியாத அஸ்வின் இன்று விளையாடியது ஆச்சரியம் ! அஸ்வின் மனைவி டிவிட் ! 2

மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  இந்திய வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆஸ்திரேலிய வீரரான புகோவிஸ்கியின் இரண்டு கேட்ச்களை தவறவிட்டார் ரிஷப் பண்ட். இதனால் பல விமர்சனங்களை ரிஷப் பண்ட் சந்தித்தார்.

இவருக்கு என்ன ? நல்ல தான் இருக்காறு ; அடுத்த போட்டியில கண்டிப்பாக விளையாடுவார் ! - ரஹானே உறுதி ! 2

ஆனால் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய ரிஷப் பண்ட் இந்திய அணி நிலைமையை அறிந்து நிதானமாக விளையாட தொடங்கினார். அப்போது ரிஷப் பண்ட்டிற்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் ரிஷப் பண்ட் முதலுதவி  எடுத்துக்கொண்டு மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கினார். ரிஷப் பண்ட் இந்த போட்டியில் 97 ரன்களை குவித்தார். காயத்திலும் கூட பண்ட் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார். பண்ட்டின் இந்த பேட்டிங் குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இவருக்கு என்ன ? நல்ல தான் இருக்காறு ; அடுத்த போட்டியில கண்டிப்பாக விளையாடுவார் ! - ரஹானே உறுதி ! 3

இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு காயம்  ஏற்பட்டுள்ளதால் பிரிஸ்பேனில்  நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய கேப்டன் ரஹானே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார். அப்போது ராஹானே “ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினார். இவர் தற்போது நலமாக இருக்கிறார். இவர் கண்டிப்பாக பிரிஸ்பேனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்” என்று நம்பிக்கையாக கூறியிருக்கிறார்.

இவருக்கு என்ன ? நல்ல தான் இருக்காறு ; அடுத்த போட்டியில கண்டிப்பாக விளையாடுவார் ! - ரஹானே உறுதி ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *