இந்த இந்திய வீரர் ஆடுவதை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்; முன்னாள் வீரர் கூறுவது இவரைத்தான்! அது விராட்கோலி, தோனி இல்லை 1

இந்த இந்திய வீரர் ஆடுவதை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்; முன்னாள் வீரர் கூறுவது இவரைத்தான்! அது விராட்கோலி, தோனி இல்லை

இந்த இந்திய கிரிக்கெட் வீரரை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார் முன்னாள் தென்னாபிரிக்க வீரர் டுமினி.

கொரோனா காரணமாக வீரர்ககள் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் வீரர்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைத்தளங்களில் நேரலை மூலம் உரையாடி வருகின்றனர்.

இந்த இந்திய வீரர் ஆடுவதை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்; முன்னாள் வீரர் கூறுவது இவரைத்தான்! அது விராட்கோலி, தோனி இல்லை 2

முன்னாள் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பொம்மி ம்பாங்வாவுடன் இன்ஸ்டாகிராம் நேரடி அமர்வின் போது தென்னாபிரிக்க வீரர் டுமினி கலந்துகொண்டார். அதில் சமகாலத்தில் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என்கிற கேள்விக்கு பதிலளித்தார்.

“எனக்கு இந்திய வீரர் ரோகித் சர்மாவை மிகவும் பிடிக்கும். இப்போதைய கிரிக்கெட் உலகில் அவர் ஆடுவதை பார்க்கவும் பிடிக்கும். அவரது பிக்கப் புல் ஷாட் அவ்வளவு அழகாக இருக்கும் பார்பதற்க்கே.” என்றார்.

இந்த இந்திய வீரர் ஆடுவதை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்; முன்னாள் வீரர் கூறுவது இவரைத்தான்! அது விராட்கோலி, தோனி இல்லை 3

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெறும் 9 போட்டிகளில் விளையாடிய ரோஹித், 648 ரன்கள் குவித்தார். சராசரியாக 81.00 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஐந்து சதங்கள் அடங்கும். ஒரு உலகக்கோப்பை தொடரில் 5 அடித்த முதல் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் அணிக்கு துணை கேப்டனாக இருக்கும் ரோஹித், இதுவரை 224 ஒருநாள் போட்டிகள், 108 டி20 போட்டிகள் மற்றும் 32 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவிற்காக விளையாடியுள்ளார். அனைத்துவித போட்டிகளிலும் சேர்த்து இதுவரை 14,029 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த இந்திய வீரர் ஆடுவதை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும்; முன்னாள் வீரர் கூறுவது இவரைத்தான்! அது விராட்கோலி, தோனி இல்லை 4
HAMILTON, NEW ZEALAND – JANUARY 29: Rohit Sharma of India bats during game three of the Twenty20 series between New Zealand and India at Seddon Park on January 29, 2020 in Hamilton, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)

ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை அடித்த உலகின் ஒரே வீரர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றாக, ஈடன் கார்டனில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் அடித்தது, 50 ஓவர் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் தனிநபர் குவித்த அதிக ரன்கள் ஆகும்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *