பானிபூரி வித்தார்னு சொல்றதுலாம் பொய்,வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெய்ஸ்வாலின் பயிற்சியாளர்..
இளம் வீரர் ஜெய்ஸ்வால் தன்னுடைய கடுமையான பயிற்சியின் மூலமே தற்போது சிறப்பாக கிரிக்கெட் விளையாடுகிறார் என ஜெய்ஸ்வாலின் இளம் வயது பயிற்சியாளர் ஜவாலா சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 வருட ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் ஜெய்ஸ்வால்,நடப்பு 2023 ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
குறிப்பாக 5 முறை டைடல் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இவர் அதிரடியாக விளையாடி சதம் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்திலும் பாராட்டுக்குரியவர் ஆகிவிட்டார்.

பாணி-பூரி கடைல வேலை செய்ததை பார்த்தீர்களா…
ஆனால் சமூக வலைதளங்களில் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டம் மற்றும் அவரின் கடின உழைப்பு பற்றி பேசாமல் அவர் இளம் வயதில் பாணி பூரி விற்றுகொண்டே கிரிக்கெட் விளையாடினார் என வதந்தி பரவி வருகிறது,இதனை உண்மை என நம்பி முக்கியமான பெரிய ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியது.
இந்த நிலையில்,ஜெய்ஸ்வாலின் இளம் வயது பயிற்சியாளர் ஜவாலா சிங், ஜெய்ஸ்வால் இளம் வயதில் பாணி பூரி விற்கவில்லை,ஆனால் அவர் அப்படி செய்ததாக கூறுவது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அவர் தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே சிறப்பாக கிரிக்கெட் விளையாடுகிறார் என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜவாலா சிங் பேசுகையில் , “பாணி பூரி விற்றார் என்று கூறுவதை நான் வெறுக்கிறேன்,அவர் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலமே தற்போது சிறப்பாக கிரிக்கெட் விளையாடுகிறார்.ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் அவர் பானிபூரி விற்றார் என் கூறி வைரல் செய்து வருகின்றனர். ஜெய்ஸ்வால் பயிற்சி செய்த அசாத் மைதானத்தின் அருகில் பல பானிபூரி கடைகள் உள்ளது, ஜெய்ஷ்வால் பயிற்சி இல்லாத நேரத்தில் அங்கு தெரிந்தவருக்கு உதவி செய்துள்ளார்.இதனால் அவர் பானிபூரி விற்று இந்திய அணிக்காக விளையாட முன்னேறியுள்ளார் என கூறுவது முட்டாள்தனம் என ஜெய்ஸ்வவால் குறித்து ஜவாலா சிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.