அறிமுகப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்த உதவியது இவர் தான்; சுயநலமற்ற வீரர் என புகழ்ந்து தள்ளிய அக்சர் பட்டேல்! 1

அறிமுக போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக இருந்தது இவர் ஒருவரே என சக சுழல் பந்துவீச்சாளரை புகழ்ந்துள்ளார் அக்சர் பட்டேல்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் 1-1 என தொடரையும் சமன் செய்துள்ளது.

அறிமுகப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்த உதவியது இவர் தான்; சுயநலமற்ற வீரர் என புகழ்ந்து தள்ளிய அக்சர் பட்டேல்! 2

முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியிலிருந்த அக்சர் பட்டேல் 2வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ரூட் உட்பட 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதில் 2 விக்கெட்டுகளை அக்சர் பட்டேல் கைப்பற்றி இருந்தார்.

அறிமுகப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்த உதவியது இவர் தான்; சுயநலமற்ற வீரர் என புகழ்ந்து தள்ளிய அக்சர் பட்டேல்! 3

இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்து தனது சூழல் மூலம் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அக்சர் பட்டேல் மேலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி டெஸ்ட் அரங்கில் தனது முதல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெகுசில வீரர்களின் வரிசையில் இவரும் இடம் பெற்றிருக்கிறார். இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த அவர் கூறுகையில்,

முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பது தனித்துவமான அனுபவமாக இருக்கிறது. போட்டி துவங்குவதற்கு முன்பாக குல்தீப் யாதவ் என்னிடம், களத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது; ஆதலால் வேகத்தை அதற்கேற்றார்போல் மாற்றி மாற்றி பந்துவீசினால் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என அறிவுறுத்தினார். எனக்கும் அதே யோசனை இருந்தது. முன்பு பேசியதுபோல் எனது வேகத்தை மாற்றி பந்துவீசினேன். பேட்ஸ்மேன்கள் நிறைய தவறு செய்தனர். என்னால் அதனை பயன்படுத்த முடிந்தது. விக்கெட்டுகளும் எடுக்க முடிந்தது என கூறியுள்ளார்.

அறிமுகப் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்த உதவியது இவர் தான்; சுயநலமற்ற வீரர் என புகழ்ந்து தள்ளிய அக்சர் பட்டேல்! 4

அறிமுக போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை அக்சர் பட்டேல் இதன்மூலம் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *