இந்திய வீரர்கள் யாரும் இல்லை... இவரை போன்று தான் விளையாட விரும்புகிறேன்; சுனில் கவாஸ்கர் ஓபன் டாக் !! 1

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடியது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது அவரை ஏபி டிவிலியர்ஸ் போல் நான் விளையாட ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

என்னுடைய காலகட்டத்தில் டி20 போட்டியை அனைவரும் வெறுத்தார்கள்

நான் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் என்னுடைய சக கிரிக்கெட் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டியை அவ்வளவாக விரும்பியதில்லை. போட்டி 3 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்பதால் என்னவோ அவர்களுக்கு அதில் அவ்வளவாக விருப்பம் இல்லாமல் போனது. ஆனால் எனக்கு எப்பொழுதும் டி20 கிரிக்கெட் போட்டி மிகவும் பிடிக்கும்.

இந்திய வீரர்கள் யாரும் இல்லை... இவரை போன்று தான் விளையாட விரும்புகிறேன்; சுனில் கவாஸ்கர் ஓபன் டாக் !! 2
Virar abd

3 மணி நேரத்தில் ஒரு போட்டி முடிவுக்கு வரும், அதே நேரத்தில் அனைத்து விஷயங்களும் அந்த மூன்று மணி நேரத்தில் அடங்கும். வீரர்கள் அனைவரும் அவர்களது திறமையை முழுமையாக காட்ட வேண்டும். நேரம் குறைவு என்பதால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பங்கள் நடைபெறும். என்னைப் பொறுத்தவரையில் டி20 கிரிக்கெட் தொடர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று கூறியுள்ளார்.

ஏபி டிவிலியர்ஸ் போல பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறேன்

தற்பொழுது கிரிக்கெட் வர்ணனையாளராக டி20 போட்டிகளில் தொகுத்து வரும் சுனில் கவாஸ்கர், ஐபிஎல் தொடரில் ஏபி டிவில்லியர்ஸ் ஆடும் போது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவரைப் போல் தான் டி20 கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மைதானத்தில் அவர் நின்றால் 360 டிகிரி அளவில் எங்கு வேண்டுமானாலும் பந்தை அடிப்பார். திடீரென அவர் அடிக்கும் அன் ஆர்தொடாக்ஸ் ஷாட்டுகள், ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் சுவிட்ச் ஹிட் என அனைத்து விதமான ஷாட்டுகளும் எனக்கு பிடிக்கும்

இந்திய வீரர்கள் யாரும் இல்லை... இவரை போன்று தான் விளையாட விரும்புகிறேன்; சுனில் கவாஸ்கர் ஓபன் டாக் !! 3


எனவே தற்பொழுது டி20 கிரிக்கெட் போட்டிகளில் நான் ஒரு வேளை விளையாடி இருந்தால் நிச்சயமாக அவர் போல தான் பேட்டிங் விளையாட விளையாட ஆசைப்பட்டு இருப்பேன் என்று இறுதியாக கவாஸ்கர் கூறி முடித்தார்.

நடந்து முடிந்துள்ள 7 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஏபி டிவில்லியர்ஸ் 207 ரன்களை குவித்துள்ளார். அவரது பேட்டிங் அவரேஜ் 51.75 மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 165 என்பது குறிப்பிடத்தக்கது. இதே பார்மை அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கின்ற ஐபிஎல் போட்டிகளில் காண்பிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *