ஷகீன் அப்ரிடி கிடையாது,உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இந்த பாகிஸ்தான் வீரர்தான்; முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பாராட்டு..
எந்த அணியிலும் நசீம் ஷாவை போன்ற ஒரு சிறந்த வேகப் பந்துவீச்சாளர் கிடையாது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியை விளையாடிய பாகிஸ்தான் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா, தன்னுடைய 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் கரியரில் கால் பதித்து இன்று வரை சிறப்பாக விளையாட வருகிறார்.
இதுவரை 42 சர்வதேச போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி 80 விக்கெட்களை வீழ்த்தி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். வெறும் வேகம் மட்டுமில்லாமல் நல்ல வேரியேஷனும் ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் செய்வதிலும் வல்லவராக திகழும் நசீம் ஷாவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டி வருகிறது. குறிப்பாக இவர் நடந்து முடிந்த 2022 ஆசியக் கோப்பை மற்றும் டி.20 உலகக்கோப்பை தொடரில் பங்காற்றிய விதம் இவருக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் டைட் .,சமகால கிரிக்கெட் தொடரில் இளம் வயதில் நசீம் ஷாவை போன்று ஒரு மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யாருமே கிடையாது என வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஷான் டைட் பேசுகையில்., “நசீம் ஷா ஒரு மிகச்சிறந்த வீரர். அவருடன் சேர்ந்து பணியாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு தற்பொழுது 20 வயது தான் ஆகிறது, இந்த வயதில் அவரைப் போன்று சிறப்பாக பந்து வீசக்கூடிய ஒருவரை நான் இதுவரை பார்த்தது கிடையாது, அவருடைய திறமை மற்றும் புத்திசாலித்தனம் மேலும் போட்டி போட வேண்டும் என்ற வெறி என அனைத்துமே ஒரு சிறந்த வீரருக்கு உள்ள பண்புகளாகும்.நசீம் ஷா புதுப்பந்தை ஸ்விங் செய்வதிலும் பழைய பந்தில் ரிவர் ஸ்விங் செய்வதிலும் நல்ல திறமையை வளர்துள்ளார். மேலும் அவருடைய வேகம் மற்றும் நல்ல யாக்கர்கள் சிறப்பாக உள்ளது,என்னை பொறுத்தவரையில் அவர் மிக சிறந்த வேகப்பந்துவீச்சாளர். அவருடைய அனுபவம் அவருடைய வயதை தாண்டி உள்ளது” என்றும் நசீம் ஷாவை, ஷான் டைட் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.