பெங்களூர் அணி நல்ல இருக்கிறதுக்கு சிராஜ் தான் முக்கிய காரணம் ; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1
பெங்களூர் அணி நல்ல இருக்கிறதுக்கு சிராஜ் தான் முக்கிய காரணம் ; முன்னாள் வீரர் சொல்கிறார்..

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த வீரர் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

2023 ஐபிஎல் தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் எப்படியாவது பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல வேண்டும் என கடுமையாக போராடி வருகிறது. குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த வருடம் எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

பெங்களூர் அணி நல்ல இருக்கிறதுக்கு சிராஜ் தான் முக்கிய காரணம் ; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

புள்ளி பட்டியலில் ஏழு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தில் இடம் பெற்றிருக்கும் பெங்களூர் அணி இனிவரும் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி விளையாட வேண்டும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

சூப்பர் சிராஜ்..பெங்களூர் அணி நல்ல இருக்கிறதுக்கு சிராஜ் தான் முக்கிய காரணம் ; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

பெங்களூர் அணி பேட்டிங்கில் ஓரளவிற்கு சிறப்பாக செயல்பட்டாலும் பந்துவீச்சில் முகமது சிராஜை தவிர அந்த அணியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாரும் பந்து வீசவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

முகமது சிராஜ் இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்களை வீழ்த்தி 2023 ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக விக்கெட் களை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் முதலிடத்தை பிடித்து பர்பிள் நிற தொப்பியையும் கைப்பற்றியுள்ளார்.

பெங்களூர் அணி நல்ல இருக்கிறதுக்கு சிராஜ் தான் முக்கிய காரணம் ; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 4

இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் முகமது சிராஜை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான்., முகமது சிராஜின் செயல்பாடு பெங்களூர் அணியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என முகமது சிராஜை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இர்பான் பதான் பேசுகையில்,“இந்த வருட ஐபிஎல் தொடரில் முகமது சிராஜ் பெங்களூர் அணிக்காக மிகச்சிறப்பாக பந்து வீசியுள்ளார்.குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அசத்தியுள்ளார்.இவருடைய செயல்பாடு பெங்களூர் அணியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வருடத்தை விட சிராஜின் பந்துவீச்சில் மிகப்பெரிய நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது.இதனால்தான் ஒரு நட்சத்திர பந்துவீச்சாளராக அவருடைய பொறுப்பும் அணியில் உயர்ந்துள்ளது என முகமது சிராஜை இர்பான் பதான் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *