கோஹ்லி அவ்வளவு பெரிய ஆள் கிடையாது ; தேவையில்லாமல் பேசிய வேகப்பந்து வீச்சாளர் !! 1

கோஹ்லி அவ்வளவு பெரிய ஆள் கிடையாது ; தேவையில்லாமல் பேசிய வேகப்பந்து வீச்சாளர்

இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவது அவ்வளவு கடினமான விசயம் இல்லை என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருவதோடு தனது தனிப்பட்ட விளையாட்டிலும் கவனம் செலுத்தி வருவதன் மூலம், கிரிக்கெட் உலகின் கிங்காக திகழ்ந்து வருகிறார்.

சமகால கிரிக்கெட் உலகின் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பமனாக விராட் கோஹ்லி திகழ்ந்து வரும் நிலையில், விராட் கோஹ்லி மிகவும் சாதரண வீரர் என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.

கோஹ்லி அவ்வளவு பெரிய ஆள் கிடையாது ; தேவையில்லாமல் பேசிய வேகப்பந்து வீச்சாளர் !! 2

கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் போது, தொடரின் மூன்று போட்டிகளிலும் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியதை குறிப்பிட்டு ஜூனைத் கான் பேசியதாவது, “ நான் விராட் கோஹ்லிக்கு வீசிய முதல் பந்து அகலப்பந்து. ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே கோஹ்லியை வீழ்த்தினேன். கோஹ்லியை வீழ்த்தியதும் அவரும் சாதாரண பேட்ஸ்மேன் என்று நினைத்துக்கொண்டேன். அந்த தொடருக்கு முன்பு வரை, இந்திய ஆடுகளங்களில் பந்து பெரியளவில் ஸ்விங் ஆகாது என்று என்னிடம் கோஹ்லி கூறினார். பார்க்கலாம் என்று நான் அவருக்கு பதிலளித்தேன். அது நான் மிகச்சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருந்த நேரம். இந்திய அணிக்கு எதிரான அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே பாகிஸ்தான் அணியில் எனது இடத்தை கெட்டியாக பிடித்து கொள்ள முடிந்தது, அது எனக்கு மிகவும் முக்கியமான தொடராகும்” என்றார்.

கோஹ்லி அவ்வளவு பெரிய ஆள் கிடையாது ; தேவையில்லாமல் பேசிய வேகப்பந்து வீச்சாளர் !! 3

கடந்த 2012ம் ஆண்டு இந்தியா வந்திருந்த பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடாத விராட் கோஹ்லி, அந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார், அதே போல் மூன்று போட்டியிலுமே ஜூனைத் கானின் பந்துவீச்சில் தான் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். ஜூனைத் கான் இந்த தொடரை குறிப்பிட்டு தான் தற்பொழுது பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *