ரிஷப் பண்ட் இந்த விஷயத்தில் நிச்சயமாக வருங்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய விவிஎஸ் லக்ஷ்மன் 1

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் விளையாடி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக அஜிங்கிய ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் அதேபோல ரோஹித் ஷர்மா 34 ரன்களும் குவித்தனர். இந்திய அணி கிட்டதட்ட 300 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

குறிப்பாக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் அவர் நேற்று 4 ரன்கள் எடுத்த நிலையில் ஜேமிசன் பந்தில் தவறான ஒரு ஷாட் அடித்து அவுட் ஆனார். இந்நிலையில் ரிஷப் பண்டுக்கு விவிஎஸ் லக்ஷ்மன் ஒரு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

ரிஷப் பண்ட் இந்த விஷயத்தில் நிச்சயமாக வருங்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய விவிஎஸ் லக்ஷ்மன் 2

நேற்று அவர் விளையாடிய விதம் மிகவும் தவறு என்று கூறிய விவிஎஸ் லக்ஷ்மன்

நேற்று ஜேமிசன்வீசிய பந்தில் தவறுதலாக ஒரு ஷாட் அடிக்கப் போய் ரிஷப் பண்ட் அவுட்டானது விவிஎஸ் இலட்சுமணனை வருத்தமடையச் செய்தது. இது குறித்து பேசியுள்ள அவர், ஒரு மைதானத்தில் விளையாடும் பொழுது அந்த மைதானத்திற்கு ஏற்றவாறு தான் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

நேற்று இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரிஷப் பண்ட் சற்று பொறுமையாக விளையாடி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று அவர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை சில மணி நேரங்கள் காட்டாமல், தடுப்பாட்டம் ஆடி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று அவர் அடித்த ஷாட் முற்றிலும் தவறானது என்று விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார்.

எப்பொழுதும் அதிரடியாக விளையாட கூடாது, சில நேரங்களில் பொறுமை வேண்டும்

மேலும் பேசிய அவர் ரிஷப் பண்ட் எப்பொழுதும் அதிரடியாக விளையாடுவதை தனது எண்ணத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார். அவர் விளையாடும் மைதானம் எப்படிப்பட்ட மைதானம் என்பதை முதலில் அவர் கணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் இந்த விஷயத்தில் நிச்சயமாக வருங்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய விவிஎஸ் லக்ஷ்மன் 3

மேலும் தனது அணை எந்த நிலையில் இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு பொறுமையாக அல்லது அதிரடியாக விளையாட வேண்டும் என்பதையும் கூறியுள்ளார். நேற்று ரிஷப் பண்ட் அவுட் ஆனதும் மிகவும் வருத்தமாக காணப்பட்டார். அவரது செய்கை இலையே அந்த ஷாட்டை அவர் ஆடி இருக்க கூடாது என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார்.

தவறை உணர்ந்த கொண்ட அவர், இனிவரும் போட்டிகளில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர் சிறப்பாக விளையாட வேண்டும். அதுவே அவரை டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் நீண்ட பயணத்திற்கு அழைத்து செல்லும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *