இந்த விசயத்தில் கோலியை விட தல தோனி தான் கெத்து; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 1

டி.20 போட்டிகளை பொறுத்தவரையில் விராட் கோலியைவிட தோனி தான் மிக சிறந்த கேப்டன் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கெல் வாகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுதப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் வெறும் 29 போட்டிகளே நடத்தப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதால் உடனடியாக ஐபிஎல் தொடர் நிறுதப்பட்டது. எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் வைத்து நடத்தப்பட உள்ளது.

இந்த விசயத்தில் கோலியை விட தல தோனி தான் கெத்து; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 2

ஐபிஎல் நடைபெறாததாலும், வெறு எங்கும் பெரிதாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததாலும், வீட்டிலேயே இருக்கும் முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்தும், சமகால கிரிக்கெட் குறித்தும் பல்வேறு விசயங்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணி குறித்து தொடர்ந்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கெல் வாகன், டி.20 போட்டிகளை பொறுத்தவரையில் விராட் கோலியை விட தோனி தான் மிகசிறந்த கேப்டன் என தெரிவித்துள்ளார்.

இந்த விசயத்தில் கோலியை விட தல தோனி தான் கெத்து; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 3

இது குறித்து மைக்கெல் வாகன் பேசுகையில், “ இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தான் சிறந்த டி20 கேப்டன். அவர் இந்திய அணிக்காக கொண்டு வந்ததெல்லாம் மிகப் பெரிய மாற்றங்கள். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் விராட் கோலி சிறந்த கேப்டனாக இருக்கலாம். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தோனியே அடித்து கொள்ள முடியாது, அவர் மிகசிறந்த கேப்டன்.” என்றார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து மைக்கெல் வாகன் பேசுகையில், “இங்கிலாந்து தொடரை கைப்பற்றும். ஒவ்வொரு முறை இங்கிலாந்து இந்தியாவுக்கு செல்லும்போதும் மோசமாக தோற்கும். அதேபோல இந்தியாவுக்கும் இங்கிலாந்து வரும்போது நடக்கும். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் டியூக் பந்தில் தோற்கடிப்பது கடினம்” என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *