இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது பாராட்டிப் பேசியுள்ளார்.
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மூன்று விதமான தொடர்களிலும் இந்திய அணிக்காக மிக சிறந்த முறையில் விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஆனால் இவரை கடந்த 4 ஆண்டுகளாக ஒயிட் பால் போட்டிகளில் இந்திய அணி பயன்படுத்தவில்லை, தோனிக்கு மிகவும் பிடித்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வலம் வந்த நிலையில் விராட் கோலிக்கு அவர் அந்த அளவிற்கு ஒத்துப் போகவில்லை.குறிப்பாக அஸ்வின் இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கபட்டதற்கு காரணம் விராட் கோலி தான் என்ற வதந்தியும் அவ்வப்போது பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு மீண்டும் என்றி கொடுத்த ரவி அஸ்வின் தான் அனைத்து விதமான போட்டிகளிலும் மிக சிறப்பாக செயல்படுவேன் என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர் ஆகிய வெள்ளை பந்து தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா இந்திய அணியின் அனுபவ வீரர் அஸ்வினை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பாராட்டிப் பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, அஸ்வின் போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரை நாம் பவர் பிளேயிலும் மிடில் ஓவரிலும் மற்றும் டெத் ஓவரிலும் பயன்படுத்தலாம், ஆனால் மற்ற பந்துவீச்சாளரகள் பவர்ப்ளே ஓவர்களில் மிக சிறந்த முறையில் பந்து வீசினால் அவரால் சிறப்பாக டெத் ஓவரில் பந்து வீச முடியாது. இதனால் அஸ்வின் போன்ற ஒரு பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு கிடைத்திருப்பது ஒரு பொக்கிஷமாகும். இவர் வரும் காலங்களில் இந்திய அணிக்காக அனைத்து விதமான தொடரிலும் விளையாடுவார் என்றும் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.
தற்பொழுது நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர் அஸ்வின் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.