இந்தியா vs ஆஸ்திரேலியா (2014)
டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஆஸ்திரேலிய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
அந்தத் தொடரில் புதிதாக கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்து அசத்தினார் அதன்பின் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 179 ரன்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அதன்பின் சிட்னி டெஸ்ட் போட்டியில் மற்றுமொரு சதமடித்து தான் யார் என்பதை ஆஸ்திரேலிய அணிக்கு நிரூபித்தார் அந்த தொடரில் இவர் மட்டும் 692 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறவில்லை. அப்பொழுது விராட் கோலி விளையாடிய ஆட்டத்தை கண்டு உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் ஆச்சரியம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
