டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்த வீரர் விளையாடுவது கடினம் தான் ;சென்னை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டீபன் பிளெமிங் !! 1
டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்த வீரர் விளையாடுவது கடினம் தான் ;சென்னை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டீபன் பிளெமிங்..

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இந்த நட்சத்திர வீரரால் பந்து வீச முடியாது என சென்னை அணியின் பயற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் சீசனில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தது. 12 போட்டிகளில் 15 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும் இருந்தது.

டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்த வீரர் விளையாடுவது கடினம் தான் ;சென்னை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டீபன் பிளெமிங் !! 2

மீதம் இருக்கும் இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் முடிக்கும் என்றும் கருதப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சிஎஸ்கே அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் முதல் இரண்டு இடங்களுக்கும் முடிக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டது.

சிஎஸ்கே அணி இப்போது 13 போட்டிகளில் 15 புள்ளிகள் மட்டுமே பெற்று தொடர்ந்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடித்தாலும், கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்கிற நிலைக்கும் தள்ளப்பட்டது.

டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்த வீரர் விளையாடுவது கடினம் தான் ;சென்னை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டீபன் பிளெமிங் !! 3

தற்போது இருக்கும் நிலையில் இந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் விளையாடுவது கடினம் தான்…

இதனால் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரம்மாஸ்திரம் என கருதப்படும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆள்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி களம் இறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போடும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்த வீரர் விளையாடுவது கடினம் தான் ;சென்னை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டீபன் பிளெமிங் !! 4

இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்ததாவது., தற்போதைய நிலையில் பென்ஸ்டோக் பந்து வீசுவது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.தற்போது அவரால் பேட்டிங்கில் விளையாட முடிந்தாலும் பந்து வீசுவது என்பது முடியாத ஒன்றாகும், ஆனால் இங்கிலாந்து அணியின் மற்றுமொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் மோயின் அலி., சென்னை அணிக்காக மிக சிறந்த முறையில் பந்து வீசி வருகிறார்.நாங்கள் டெல்லி அணிக்கு எதிராக விளையாடும் மைதானம் சூழலுக்கு சாதகமாக இருப்பதால் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சமபலமாக உள்ளோம். மேலும் சென்னை அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது எங்களுடைய ஸ்டைலே தோல்வி அடைந்தாலும் ஆடும்லெவனை மாற்ற மாட்டோம் என்பதுதான், கடந்த போட்டிகளில் மோசமாக செயல்பட்டாலும் நிச்சயம் சென்னை நிர்வாகம், அணி வீரர்களை மாற்றும் எண்ணத்தில் இல்லை என்றும் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்திருந்தார்.

டெல்லி அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்த வீரர் விளையாடுவது கடினம் தான் ;சென்னை ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்டீபன் பிளெமிங் !! 5

டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டி முடிவடைந்த பிறகு ஆசஸ் தொடருக்கு தயாராகுவதற்கு பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து செல்ல உள்ளார் என்ற தகவலும் சென்னை அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *