"அவர் அப்படி பண்ணலனா.. கோப்பை நமக்குத்தான்"; அந்த சம்பவத்தை வைத்து இந்திய வீரரை குத்திக்காட்டி பேசிய புவனேஸ்வர் குமார்! 1

“அவர் அப்படி பண்ணலனா.. கோப்பை நமக்குத்தான்”; இந்திய வீரரை குத்திக்காட்டி பேசிய புவி!

இவர் செய்த ஒரு தவறால் நாம் கோப்பையை இழந்துவிட்டோம் என முன்னணி இந்திய வீரரை குத்திக்காட்டி பேசியுள்ளார் புவனேஸ்வர் குமார்.

இந்திய அணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார். சமீபகாலமாக, அதிகமான அளவில் காயம் காரணமாக இவர் அவதிப்பட்டு வருவதால் அணியில் சரிவர ஆடமுடியவில்லை. ஆனாலும், இவரது இடத்தை நிரப்ப தற்போது வரை எவரும் வரவில்லை. காயத்திலிருந்து எப்போது மீண்டு வந்தாலும் மீண்டும் அணியில் இடம்பிடித்து விடுவார்.

"அவர் அப்படி பண்ணலனா.. கோப்பை நமக்குத்தான்"; அந்த சம்பவத்தை வைத்து இந்திய வீரரை குத்திக்காட்டி பேசிய புவனேஸ்வர் குமார்! 2

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டிலேயே அடைந்துகிடப்பதாக தெரிவித்த புவி, தனியார் நிகழ்ச்சிக்கு நேரலை பேட்டி ஒன்றை இணையம் வாயிலாக அளித்தார். அதில், சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது குறித்தும், பும்ராஹ் தெரியாமல் செய்த ஒரு தவறு கோப்பையை இழக்க வைத்தது என்றும் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் பலபரிச்சை மேற்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த பாக்., அணி 338 ரன்களை குவித்தது. பாக்., அணிக்கு துவக்க வீரர் பக்கர் ஜமான் சாதம் அடித்ததே திருப்பு முனையாக அமைந்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 158 ரன்களுக்கு சுருண்டதால் 180 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை வென்றது பாகிஸ்தான் அணி.

"அவர் அப்படி பண்ணலனா.. கோப்பை நமக்குத்தான்"; அந்த சம்பவத்தை வைத்து இந்திய வீரரை குத்திக்காட்டி பேசிய புவனேஸ்வர் குமார்! 3

இந்த போட்டி குறித்து புவி அளித்த பேட்டியில், ஃபகார் ஜமான் பும்ராஹ் பந்தில் துவக்கத்திலேயே அவுட் ஆகியிருப்பார். பும்ராவின் பந்தில் அவர் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். அந்த பந்து நோ-பாலாக போனது. பகார் ஜமான் அதை பயன்படுத்தி சதம் விளாசிவிட்டார். இதனால் பாக்., அணி பெரிய ஸ்கொரை எட்டியது.

"அவர் அப்படி பண்ணலனா.. கோப்பை நமக்குத்தான்"; அந்த சம்பவத்தை வைத்து இந்திய வீரரை குத்திக்காட்டி பேசிய புவனேஸ்வர் குமார்! 4

அடுத்து ஆடிய இந்திய அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இறுதியில் தோற்றே போனோம். பகார் ஜமானுக்கு பும்ரா வீசிய நோ-பால் தான் போட்டியை பாக்., பக்கம் மாற்றியது. இந்திய அணி போராட அவர்கள் வாய்ப்பே கொடுக்கவில்லை. நோ-பால் ஒன்று போட்டியை மாற்றிவிட்டது.” என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *