ரிக்கி பாண்டிங் தனது பாசிட்டிவை அணிக்குள் பரப்புகிறார் என அமித் மிஸ்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவில் பிரிமியர் தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இம்முறை டில்லி கேப்பிடல்ஸ் என்ற பெயருடன் அணி களமிறங்கி உள்ளது. முதல் லீக் போட்டியில் மும்பையை வீழ்த்திய டில்லி, கோல்கட்டாவில் நடந்த போட்டியில் (எதிர்– சென்னை) வீழ்ந்தது.
இரண்டு போட்டியிலும் துவக்க வீரர் தவான் (43 ரன்– 36 பந்து, 51 ரன்–47 பந்து) கைகொடுத்தபோதும், மந்தமாக விளையாடுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து டில்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியது: எப்படிப்பட்ட ஆடுகளத்திலும் இறங்கியவுடன், விளாச முடியாது. தவிர, ‘பவர் பிளே’ ஓவரில் விளையாடுவது கடினம்தான். ஆனால், துவக்க வீரர் என்பதால் தவானின் பங்களிப்பு முக்கியமானது. போட்டியில் வேகமாக ரன் சேர்க்க வேண்டும் என்பதை இவரே உணர்கிறார். பேட்டிங்கின்போது, தவானின் கணுக்கால் பகுதியில் சிறிய அளவில் வலி ஏற்பட்டது. இதையும் தாண்டி ரன்கள் சேர்க்க திணறியதும் மந்தமான ஆட்டத்திற்கு காரணமாக அமைந்தது.
ஆடுகளம் காரணமா
மும்பைக்கு எதிராக ரிஷாப் பன்ட், 27 பந்தில் 78 ரன்கள் விளாசினார். இதற்காக, ஒவ்வொரு முறையும் இவர் மட்டும்பொறுப்பை தோளில் சுமக்க முடியாது. ரிஷாப் மட்டுமில்லாமல், இங்க்ராம் உள்ளிட்ட வீரர்களும் இப்படி செயல்படுவது கடினம்தான். இரண்டாவது போட்டி தோல்விக்கு ஆடுகளத்தை குறை கூற முடியாது. இதே ஆடுகளத்தில்தான், ‘சேசிங்’ செய்து சென்னையின் வாட்சன், ரெய்னா விளையாடினர். இவர்களால் மட்டும் எப்படி விளாச முடிந்தது. பந்துவீச்சு சரியில்லை என கூற மாட்டேன். சென்னைக்கு எதிரான போட்டியின் கடைசி கட்டத்தில் கூடுதலாக 30 ரன்கள் சேர்த்திருந்தால், வெற்றிக்கு முயற்சி செய்திருக்கலாம். இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.
Sign of things to come, @KagisoRabada25? ?
Neela pehen ke aao #QilaKotla mein, and watch our bowlers bring out their best in #DCvKKR! ?#ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/5TBWzpTJsI
— Delhi Capitals (Tweeting from ?) (@DelhiCapitals) March 30, 2019
டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 185 ரன்கள் விளாசியது அதன் பின்னர் வந்த டெல்லி அணி வெற்றியை நோக்கி வீறுநடை போட்டு சென்று கொண்டிருந்தது .ஆனால் கடைசி 2 ஓவர்களில் ஆட்டம் அப்படியே மாறியது.
அந்த அணியின் துவக்க வீரர் பிரித்திவ் ஷா 99 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் குல்தீப் யாதவ் பந்தை தாக்குப் பிடிக்காமல் வெளியேறினர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டெல்லி அணி 5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .இதற்கு காரணம் குல்தீப் யாதவ் இன் அபார பந்து வீச்சாகும்
இந்த சூப்பர் ஓவரில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது. டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் களமிறங்கினர். கொல்கத்தா அணியின் சார்பில் பிரஷீத் கிருஷ்ணா பந்துவீசினார் முதல் பந்தல் ரிஷப் பண்ட் வேகமாக ஒரு ரன் அடித்தார். அதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பவுண்டரி விளாசி அதற்கு அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்து விடலாம் என தூக்கி அடித்தார் ரிஷப் பண்ட். ஆனால் அந்த பந்தில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது .அதற்கு அடுத்த இரண்டு பந்துகளில் பவுண்டரிகள் வரவில்லை. இதன் காரணமாக சூப்பர் ஓவர் முடிவில் 10 ரன் மட்டுமே டெல்லி அணி எடுத்திருந்தது.
அதற்குப் பின்னர் 10 ரன்களை எளிதாக கொல்கத்தா அணி எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பேட்டிங் பிடிக்க ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் வந்தனர். டெல்லி அணியின் சார்பில் 6 பந்துகளை வீச ககிசோ ரபாடா களமிறங்கினார்
முதல் பந்தில் ரசல் பவுண்டரி விளாச, இந்த இலக்கை எளிதாக கொல்கத்தா வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. அவ்வளவு அற்புதமாக வீசினார் ரபாடா.
பின்னர் மூன்றாவது பந்தில் ரசலின் ஸ்டம்புகளை தெரிக்கவிட்டார் ரபாடா. அதன் பின்னர் ராபின் உத்தப்பா களத்துக்கு வந்தார். அடுத்த மூன்று பந்துகளிலும் ஒவ்வொரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 6 பந்துகளில் 7 டன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றி பெறவைத்தார் ரபாடா. ஐபிஎல் தொடரின் சிறந்த போட்டியாக இது அமைந்தது
This. Is. New. Delhi. ❤
Coach Ricky Ponting out there giving us all the #MotivationalFeels with his speech after the #MIvDC game ??
The boys are ready for #DCvCSK at #QilaKotla! #ThisIsNewDelhi #DelhiCapitals #CoachSpeaks pic.twitter.com/hLzTuQI7X2
— Delhi Capitals (Tweeting from ?) (@DelhiCapitals) March 26, 2019