இந்திய அணியிலும் தோனி இனி மாஸ் காட்டுவார்; கங்குலி நம்பிக்கை !! 1
இந்திய அணியிலும் தோனி இனி மாஸ் காட்டுவார்; கங்குலி நம்பிக்கை

ஐ.பி.எல் தொடரில் தோனியின் சிறப்பான ஆட்டம் சர்வதேச போட்டிகளிலும் தொடரும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் தொடர், அயர்லாந்து டி20 தொடர் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான அணி நேற்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியிலும் தோனி இனி மாஸ் காட்டுவார்; கங்குலி நம்பிக்கை !! 2

இதில் ஓரளவுக்கு நன்றாகவே தேர்வுக்குழுவினர் செயல்பட்டுள்ளனர், விராட் கோலிக்குப் பதில் ஷ்ரேயாஸ் அய்யர் என்று சிலர் கருத, மாற்றாக கருண் நாயரைத் தேர்வு செய்தது, ரஹானேவுக்குக் கேப்டன்சி கொடுக்கப்பட்டுள்ளது, அதே போல் அம்பாட்டி ராயுடு மீண்டும் அணிக்கு வந்தது ஆகியவை நல்ல தேர்வாகவே பார்க்கப்பட்டு வரும் சூழலில் ‘தாதா’ ரஹானேவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

அவர் இது தொடர்பாகக் கூறும்போது, “அம்பாட்டி ராயுடுவை விட நான் ரஹானேவுக்கு முன்னுரிமை அளிப்பேன். இங்கிலாந்தில் ரஹானே எல்லாரையும் விட சிறப்பாக ஆடக்கூடியவர், அங்கு பந்துகள் ஸ்விங் ஆகும். ரஹானே இங்கிலாந்தில் நல்ல சாதனை வைத்துள்ளார்” என்று கூறினார்.

இந்திய அணியிலும் தோனி இனி மாஸ் காட்டுவார்; கங்குலி நம்பிக்கை !! 3

ஆனால் ரஹானேவின் நடப்பு பார்ம் கங்குலி ஆதரவுக்கு எதிராக உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 6 போட்டிகளில் 140 ரன்களைத்தான் ரஹானே எடுத்துள்ளார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயுடு அதிக ரன்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார், ரஹானே சரியாக ஆடவில்லை.

அதே போல் தோனி குறித்து பேசிய கங்குலி, “ஐ.பி.எல் தொடரில் தோனி அபாரமாக விளையாடி வருகிறார், அவரின் இந்த சிறப்பான ஆட்டம் சர்வதேச போட்டிகளிலும் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *