டிஎன்பிஎல்-இல் மிகப்பெரிய சூதாட்டம்.. கிளரும் பிசிசிஐ!! 1

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் மிகப்பெரிய சூதாட்டம் நடந்துள்ளதாக பிசிசிஐக்கு கிடைத்த தகவலின்படி, விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சூதாட்டங்கள் நடந்திருப்பதாக அண்மையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று கட்டுரை ஒன்றை எழுதி இருந்தது. அதில் அணி உரிமையாளர் உடன் இணைந்து சட்டத்திற்குப் புறம்பான முறையில் ஒப்பந்தங்கள் செய்து புக்கீஸ் மற்றும் மேட்ச்-பிக்சர் இருவரும் தொடர்ந்து சூதாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவற்றை மாற்ற அணி உரிமையாளர்களிடம் பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை பிசிசிஐ கட்டுப்பாட்டில் இல்லாமல் நடைபெற்று வந்த சிறு டி20 தொடர்களில் இதுபோன்ற மேட்ச் பிக்சிங் நிகழ்வுகள் நடைபெற்றது தற்போது முதல்முறையாக பிசிசிஐ கட்டுப்பாட்டில் வரும் மிகப்பெரிய தொடரான டிஎன்பிஎல் தொடர் பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவின் விசாரணைக்கு வந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டிஎன்பிஎல்-இல் மிகப்பெரிய சூதாட்டம்.. கிளரும் பிசிசிஐ!! 2

குஜராத்தில் டி20 தொடரில் மேட்ச் பிக்ஸிங் செய்து சிக்கியவர்கள் டிஎன்பிஎல் அணி உரிமையாளருடன் தொடர்பில் இருப்பது ஊழல் தடுப்பு பிரிவிற்கு தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டிஎன்பிஎல் தொடரின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை இப்பிரிவு கண்காணித்து வருகிறது.

மேலும் கிடைத்த தகவலின்படி, அணி உரிமையாளர்களுக்கு மேட்ச் ஃபிக்சிங் செய்பவர்களால் 4 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பலனாக டிஎன்பிஎல் பொதுக் கூட்டத்தில் நடக்கும் தகவல்கள் அனைத்தும் இவர்களுக்கு தெரியப்படுத்தும் படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடும் பயிற்சியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் ஒரு சொகுசு காரும் வழங்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பயிற்சியாளர்கள் வீரர்களுக்கு இந்த ஓவரில் எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்பதை கட்டளையிட வேண்டும் என மேட்ச் பிக்சிங் செய்பவர்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

டிஎன்பிஎல்-இல் மிகப்பெரிய சூதாட்டம்.. கிளரும் பிசிசிஐ!! 3

விரைவில் பிசிசிஐயின் ஊழல் தடுப்பு பிரிவு தமிழ்நாடு காவல் துறையிடம் சூதாட்டத்தில் ஈடுபட்ட அணி உரிமையாளர் குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் அளிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *