உலகக் கோப்பையை வெல்லும் அணி என தோன்றும் போது, ரிக்கி பாண்டிங் போன்ற வென்றவர்கள் கருத்தை கேட்க வேண்டும். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மூன்று முறையும் உலகக் கோப்பையை வென்றார், 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கேப்டனாக அணியை வழிநடத்தி சென்றுள்ளார். அவருக்கு நன்றாக தெரியும் உலகக்கோப்பையை வெல்ல எதை சரியாக செய்ய வேண்டும் என்று.தோனி இந்தியஅணிக்குமுக்கியபகடையாய்இருப்பார். ஆனால், மற்றவர்கள் கண்கள் எல்லாம் கோஹ்லி மீது இருக்கும் என எனக்கு நன்றாக தெரியும் என்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா இழந்த சில நாட்களுக்கு பிறகு பாண்டிங் கருத்துத் தெரிவிக்கிறார். கடைசி இரண்டு ஒருநாள் ஆட்டத்தில் கோலி தலைமையிலான கேப்டன் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இரண்டு வெற்றியை பதித்த பிறகு 3-2 என்ற கணக்கில் தோல்வியை பெற்றது. இறுதி இரண்டு போட்டிகளுக்கு டோனி ஓய்வளிக்கப்பட்டார்.
குறிப்பாக, 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 என இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலியர்களை தடுக்க முடியாமல் தோல்வியை தழுவியது. பௌலர்கள் திணறுவதையும், விக்கெட்பின்னால் இருந்த ரிஷப் பண்ட் சொதப்புவதையும் பார்த்து தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். வழக்கமாக, அந்த இறுக்கமான சூழ்நிலைகளில் இந்திய அணிக்கு துருப்பு சீட்டாக தோனி இருப்பதை நாம் பார்த்திருப்போம். கோஹ்லிக்கு அந்த போட்டியில் தோனி இல்லாதது மிகுந்த பின்னடைவாக போனது. இறுதியில் இந்தியா தோல்வியை தழுவியது.

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 273 ரன்கள் எடுக்க தவறி தொடரை இழந்து தவித்தது. கோஹ்லிக்கு தோனி ஒரு பெரிய பிளஸ் என்று பாண்டிங் உணர்கிறார். டோனி தனது பேட்டிங் திறமைகளுடன் அணிக்காக நிறைய நுட்பங்களை வகுக்கிறார் என்று பாண்டிங் கூறினார்.
உலகக் கோப்பையில் எம்.எஸ் தோனி போன்ற ஒரு வீரர் கோஹ்லியுடன் இருப்பது ப்ளஸ். அவர் நிறைய அனுபவங்களை கொண்டுள்ளார், விளையாட்டு பற்றி நிறைய அறிவு உள்ளது. உலகக் கோப்பையை வென்ற அவர், உலகக் கோப்பையை வென்ற அணிக்கு கேப்டனாகவும் இருந்தார், “ ரிக்கி பாண்டிங் இந்தியா டுடேவிடம் கூறினார் .
“உங்கள் பக்கம் தோனி போன்ற ஒருவர் இருப்பது நல்லது. ஆனால் நான் விராத் விஷயத்தில் கேப்டன் பதவிக்கு அவர் அதிகம் அனுபவப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், பேட்டிங் என வந்தால் கோஹ்லி எப்போதும் பேட்டிங் மூலம் இன்னிங்ஸின் நடுப்பகுதியை கட்டுப்படுத்துவதாக நினைக்கிறேன், குறிப்பாக ரன்களை துரத்தல் நேரத்தில். கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக பந்து வீச மற்றும் தொடரை வெல்ல முடிந்தது ஏன் என்று பார்த்தால் தோனி இல்லாதது பிரதான காரணம் என்று நான் நினைக்கிறேன் “என்று பாண்டிங் கூறினார்.

உலக கோப்பை மே 30 ம் தேதி தொடங்கும். இந்தியா, மறுபுறம் ஜூன் 5 அன்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் துவங்குகிறது.