பஞ்சாப் அணி 88 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஓபனிங் இறங்கி கடைசி வரை நின்று 140+ ஸ்கோராக மாற்றிய ஷிகர் தவான், இதற்கு யார் காரணம்? என்பதை போட்டி முடிந்தபின் அளித்த பேட்டியில் கூறினார்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது.

பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் மற்றும் ஷிக்கர் தவான் இருவரும் ஓபனிங் செய்தனர். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன் இப்போட்டியில் ஆடிய முதல் பந்திலேயே அவுட் ஆனால்
அடுத்ததாக உள்ளே வந்த மேத்யூ ஷாட்(1) மற்றும் ஜித்தேஷ் ஷர்மா(4) இருவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, 22 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. சாம் கர்ரன் மற்றும் ஷிகர் தவான் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 41 ரன்கள் சேர்த்தனர்.
சாம் கர்ரன் 22 ரன்கள் அடித்து அவுட்டான பிறகு, உள்ளே வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறியதால், 88 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.
மறுமுனையில் விக்கெட் விடாமல் அபாரமாக ஆடிவந்த ஷிகர் தவான் அணியின் ஸ்கொர் 100 ரன்களை கடக்க உதவினார். இவரும் அரைசதம் அடித்தார்.

9 விக்கெட்டுகள் இழந்ததால், கடைசியில் வந்த வீரருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் கடைசி 30 பந்துகளில் 28 பந்துகளை இவரே பிடித்து 52 ரன்கள் அடித்தார். 10ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்து புதிய ரெக்கார்ட் வைத்தது இந்த ஜோடி.
88/9 என்கிற நிலையில் இருந்து 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 143/9 ரன்கள் வரை சென்றது என்றால் முழுக்க முழுக்க ஷிகர் தவான் மட்டுமே காரணம். இவர் இறுதிவரை அவுட்டாகாமல் 66 பந்துகளில் 99 ரன்கள் அடித்தார்.

தனி ஆளாக போராடியது பற்றி பேசிய ஷிகர் தவான் கூறுகையில், “ஹைதராபாத் ரசிகர்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்று நிறைய போட்டிகள் நான் விளையாடு இருந்தாலும் இதுதான் என்னுடைய பெஸ்ட். ஏனெனில் ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தாலும் மற்றொரு பக்கம் நிலையத்தில் நின்று அணைக்கு நம்பிக்கையாக செயல்பட்டதை நினைத்து மிகவும் மகிழ்கிறேன் அந்த வகையில் இது எனக்கு பெஸ்ட்” என்றார்.
பஞ்சாப் அணி நிர்ணயத்தை 144 ரன்கள் இலக்கை சேஸ் செய்த ஹைதராபாத் அணிக்கு, முதலில் இரண்டு விக்கெட் விழுந்திருந்தாலும் பின்னர் மார்க்ரம் மற்றும் ராகுல் திரிப்பாதி இருவரும் ஜோடி சேர்ந்து ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதில் ராகுல் திரிப்பாதி அரைசதம் அடித்து அசத்தினர்.

எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது.