நான் பார்த்து பயந்த ஒரே ஒரு பேட்ஸ்மேன் இவர் தான்; சுனில் நரைன் ஓபன் டாக் !! 1

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக்கிர்க்கு எதிராக பந்து வீசுவதற்கு நான் மிகவும் சிரமப் பட்டேன் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சுனில் நரேன்,பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் மிக சிறந்த முறையில் விளையாடக் கூடிய திறமை படைத்தவர்.

நான் பார்த்து பயந்த ஒரே ஒரு பேட்ஸ்மேன் இவர் தான்; சுனில் நரைன் ஓபன் டாக் !! 2

கிட்டதட்ட பத்து வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் படைத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் சுனில் நரேன், தான் விளையாடிய காலங்களில் சிறந்த பேட்ஸ்மேன்களில் விக்கெட்களையும் எளிதாக வீழ்த்தி அசத்தியுள்ளார்.

எதிர்வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய 150வது ஐபிஎல் போட்டியில் விளையாட காத்திருக்கும் சுனில் நரேன்,ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்களையும், தன் கிரிக்கெட் கரியரில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களையும் வெளிப்படையாகப் பேசி வருகிறார்.

அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் தான் எதிர்கொண்ட மிக கடினமான பேட்ஸ்மேன் விரேந்தர் சேவாக் தான் என்று சுனில் நரைன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

நான் பார்த்து பயந்த ஒரே ஒரு பேட்ஸ்மேன் இவர் தான்; சுனில் நரைன் ஓபன் டாக் !! 3

சேவாக் குறித்து சுனில் நரைன் பேசுகையில், “ நான் விரேந்தர் சேவாக் குறித்து இந்த இடத்தில் பதிவு செய்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவரிடம் எப்பொழுது பந்து வீசினாலும் மிகவும் கடினமாகவே உணர்வேன் ஏன் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் எந்த நிலைமையில் இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்பொழுதுமே அதிரடியாக விளையாடக் கூடியவர் என்று சேவாக்கின் ஆட்டம் குறித்து சுனில் நரைன் பேசியுள்ளார்.

இடையில் முறையற்ற முறையில் பந்து வீசுவதாக தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுனில் நரேன், அதிலிருந்து மீண்டு தற்போது மிக சிறந்த முறையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *