இந்த இந்திய வீரருக்கு நான் மிகப்பெரும் ரசிகன்; கிளன் மெக்ராத் ஓபன் டாக்
கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவனான கிளன் மெக்ராத், தான் இந்திய வீரர் பும்ராஹ்வின் மிகப்பெரும் ரசிகன் என ஓபனாக தெரிவித்துள்ளார்.
சென்னை வந்துள்ள கிளன் மெக்ராத் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது கூறியதாவது:
தடை விதிக்கப்பட்டிருந்த டேவிட் வார்னரும் ஸ்மித்தும் ஐபிஎல்-ல்லு திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என நினைக்கிறேன். ஒரு வருட தடை, அவர்களுக்கு ரன் பசியை அதிகரித்துள்ளதால் நன்றாக விளையாடுவார்கள். இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பினால் மற்ற வீரர்களுக்கு சிக்கல் வருமா என்று கேட்கிறார்கள்.
வார்னர் வந்தால், தொடக்க ஆட்டக் காரராக களமிறங்குவார். உஸ்மான் கவாஜா மூன்றாம் இடத்திலும் ஸ்மித் நான்காம் இடத்திலும் களமிறங் குவார்கள். இதனால், அணியை தேர்வு செய்வதில் ஆஸ்திரேலிய அணிக்கு சுகமான தலைவலியாகவே இருக்கும். சமீபத்தில் இந்தியாவில் நடந்த தொட ரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியிருப்பது, உலகக் கோப்பைக்கு முன் நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. பும்ராவின் தீவிர ரசிகன் நான். அவர் பந்துவீசும் ஸ்டைல், கடைசி கட்டத்தில் அவர் வீசுகிற யார்க்கர், சரியான இடத்தில் பந்தை வீசுவது எல்லாம் தனித்துவமாக இருக்கிறது. அவரும் புவனேஷ்வர்குமாரும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புக்கு முக்கியமானவர்களாக இருப்பார்கள். புவனேஷ்வர்குமார் சிறப்பாக ஸ்விங் செய்கிறார். அவர் நன்றாக விளையாட வேண்டும்.
இந்திய கேப்டன் விராத் கோலி, ஆக்ரோஷமான வீரர். விளையாட்டுக்குள் தன்னை முழுமையாக உட்படுத்திக்கொண்டு எப்போதும் ஆடுவது முக்கியமான ஒன்று. அதை கோலி நன்றாகவே செய்கிறார். இவ்வாறு கிளன் மெக்ராத் கூறினார்.
உலக கோப்பை குறித்து மெக்ராத் கூறியதாவது;
உலக கோப்பையை இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒரு அணி வெல்லும் என கிளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மெக்ராத், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால் உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக ஆடி வீழ்த்தியுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கான வாய்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மீண்டெழுந்துள்ளது. இந்திய அணியை வீழ்த்தி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. ஸ்மித்தும் வார்னரும் அணியில் இணைந்தால் அணி மேலும் வலுப்பெறும் என்று மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.