இலங்கை அணியின் ஒட்டுமொத்த செயல்திறன் அதிர்ச்சியாக இருப் பதாக கேப்டன் ஏஞ்சலோ மேத் யூஸ் தெரிவித்தார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொட ரில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ் தான் அணிக்கு எதிரான ஆட்டத் தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்து. 250 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி ஆப்கானிஸ்தான் வீரர்களின் அபாரமான பந்து வீச்சு மற்றும் அசத்தலான பீல்டிங்கால் 41.2 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக உபுல் தரங்கா 36, திஷாரா பெரேரா 28, தனஞ் ஜெயா டி சில்வா 23, கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 22, குசால் பெரேரா 17, சீகன் ஜெயசூரியா 14 ரன்கள் எடுத்தனர். இதில் தனஞ் ஜெயா டி சில்வா, சீகன் ஜெய சூரியா ஆகியோர் ரன் அவுட் முறையில் தங்களது விக்கெட்களை தாரை வார்த்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான், குல்பாதின் நயிப், முகமது நபி, ரஷீத் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஏற்கெனவே வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஆட் டத்தில் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்ததால் 5 முறை சாம்பியனான இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
தோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் கூறுகையில், ஒட்டு மொத்த அணிக்கும் இது அதிர்ச்சி தரும் செயல்திறன். முதல் ஆட்டத் திலும் நாங்கள் 150 ரன்களுக் குள் ஆட்டமிழந்தோம்.
ஆப்கானிஸ்தான் அணியினர் எங்களைவிட அனைத்து துறை களிலும் சிறப்பாக செயல்பட்டார் கள். அவர்களுக்கு வாழ்த்துகள். ஒரு நல்ல தொடக்கத்தை நாங்கள் பெற்றோம். ஆனால் மீண்டும் ஒரு முறை நடுகள ஓவர்களில் சரிவை கண்டோம்.

பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். பீல்டிங்கிலும் முன்னேற்றம் இருந்தது. பேட்டிங் துறைதான் ஒட்டுமொத்தமாக சரிவை சந்தித்துவிட்டது. அழுத்த மான சூழ்நிலையை நாங்கள் சரி யாக கையாளவில்லை. இரு ஆட் டங்களிலும் 150 ரன்களை கூட கடக்க முடியாதது அதிர்ச்சியாக வும், ஏமாற்றமாகவும் உள்ளது” என்றார்.