இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய அணிக்காக மீண்டும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இறுதியாக 2019ஆம் ஆண்டு ஒருநாள் தொடரிலும், 2018 ஆம் ஆண்டு டி20 தொடரிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதற்குப்பின் இவருக்கு இந்திய அணிக்காக லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

தற்போது டெஸ்ட் தொடருக்கான பந்துவீச்சாளராக மட்டுமே பார்க்கப்படுப் உமேஷ் யாதவ், நிச்சயம் 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மீண்டும் இணைந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, நிச்சயம் நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்று அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பேன், நான் வெள்ளை பந்து கிரிக்கெட்டர்ரும் தான்(I am a white-ball cricketer too), நான் இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணித் தேர்வாளர்கள் மீண்டும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்கு விளையாடுவதற்கு எனக்கு வாய்ப்பை கொடுப்பார்கள்.இதன் காரணமாகவே இந்த ஐபிஎல் தொடரில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன், இந்த வாய்ப்பு கிடைப்பதற்காக நிச்சயம் கடுமையாக முயற்சிப்பேன், மீண்டும் நான் இந்திய அணிக்காக லிமிடெட் ஓவர் போட்டிகளில் பங்கேற்பேன் மேலும் இதுகுறித்து நான் தன்னம்பிக்கையுடன் உள்ளேன் என்று உமேஷ் யாதவ் பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர், நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் அடுத்த வருடம் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடர் என இரண்டிலும் பங்கு பெறுவேன் என்றும் தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமான உமேஷ் யாதவ், 2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 2 கோடி ரூபாய் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.