பிசிசிஐ.,யின் சுழற்சி முறையில் வீரர்கள் பயன்படுத்தம் திட்டம், இந்திய அணியின் ஆரோக்கியமான ஒன்று என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சுழற்சி முறையில் வீரர்கள் பயன்படுத்தி வருவதால் வீரர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கின்றது. அதனால் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பின் போது சிறப்பாக செயல்பட முடிகிறது. முன்னதாக எனக்கு டிசம்பர் மாதம் விடுமுறை தேவை. அதற்காக முன்னரே பிசிசிஐ.,யிடம் தெரிவித்துள்ளேன்.
ரோபோ இல்லை:
மற்ற நாடுகளின் அணிகளை விட, இந்திய அணி அதிக போட்டிகளில் இந்தாண்டு விளையாடியுள்ளது. இதனால் வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவை.
அந்த வகையில் எனக்கும் கண்டிப்பாக ஓய்வு அவசியம். என உடல் கலைப்படைந்து ஓய்வு தேவை என தோன்றும் போது அதற்கான ஓய்வு கொடுப்பது அவசியம். நன் ஒன்றும் ரோபோ கிடையாது. என் சதையை வெட்டி சோதனை செய்து பார்த்தால் ரத்தம் வடியும் என கோலி கூறியுள்ளார்.
கோலி டிசம்பர் மாதத்தில் விளையாட மாட்டார் என்பதால் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியல் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 3வது டெஸ்ட் போட்டியில் ரஹானே கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.
முன்னதாக ஹர்திக் பாண்டியாவுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா vs இலங்கை:
தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விலையாடவுள்ளது. இதற்க்காக இரு அணி வீரர்களும் சீரிய முறையில் பயிற்சி செய்து வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டி நாளை (நவ்.16) கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் இது வரை இந்த மைதானத்தில் விளையாடியது இல்லை, அதே போல் இலங்கை அணி ஒரு முறை கூட இந்தியாவில் தொடரை வென்றதில்லை. இதற்கு முன்பு தன் சொந்த மண்ணிலேயே 3-0 என்ற கணக்கில் இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை அணி. ஆனால், அதன் பிறகு பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் தொடர் வென்று சாதனை படைத்தார்கள்.
இலங்கைக்கு சென்று இந்திய அணி விளையாடிய பிறகு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற அணிகளுடன் விளையாடியுள்ளது இந்தியா. அந்த இரண்டு அணிகளையும் புரட்டி போட்டு வெற்றி பெற்றது இந்திய அணி. இதனால், இந்த தொடரில் இந்திய அணியின் கை ஓங்கியே இருக்கும்.