இதோட நிறுத்திக்கங்க... எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு; வெஸ்ட் இண்டீஸ் மீது ஆண்ட்ரியூ ரசல் காட்டம் !! 1

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிர்ச்சியாளர் பில் சைமன்ஸ் விமர்சனம் செய்வதை தான் ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக ஆண்ட்ரே ரசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணி என்று கருதப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த தொடர்களில் தொடர் தோல்வியை சந்தித்து உலக கிரிக்கெட் வட்டத்தில் பலவீனமான அணியாக தற்போது கருதப்படுகிறது.

இதோட நிறுத்திக்கங்க... எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு; வெஸ்ட் இண்டீஸ் மீது ஆண்ட்ரியூ ரசல் காட்டம் !! 2

இதற்கு முக்கிய காரணம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெறவில்லை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பேசி வந்த நிலையில், விண்டீஸ் அணியின் தலைமை தேர்வாளர், நாங்கள் அணியில் தேர்வு செய்வதற்கு வீரர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்று ஆண்ட்ரே ரசல் குறித்து தெரிவித்திருந்தார்.

மேலும் இவரைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சுனில் நரேன் இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹன்றெட் (THE HUNDRED) தொடரில் பங்கேற்று விளையாடுவதால் அவரையும் அணியில் தேர்ந்தெடுக்க முடியாது நிலையில் உள்ளார்.

இதோட நிறுத்திக்கங்க... எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு; வெஸ்ட் இண்டீஸ் மீது ஆண்ட்ரியூ ரசல் காட்டம் !! 3

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நாட்டுப்பற்றை விட பணத்திற்காக விளையாடுகிறார்கள் என்ற விமர்சனம் இருந்துவந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் சைமன்ஸ், தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுங்கள் என்று வீரர்களிடம் பிச்சை கேட்க போவதில்லை என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சைமன்ஸ் தெரிவித்திருந்ததாவது, “வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுங்கள் என்று நான் வீரர்களிடம் பிச்சை கேட்கப் போவதில்லை இது மிகுந்த வேதனை அளிக்கிறது, இதற்கு வேறு எந்த ஒரு தீர்வும் இல்லை. ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும், நான் சொந்த நாட்டிற்காக விளையாடுங்கள் என்று வீரர்களிடம் பிச்சை கேட்க முடியாது.. நீங்கள் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்றால், முதலில் அதற்காக தயாரில் இருக்க வேண்டும், வெவ்வேறு இடத்தில் விளையாடுவதால் அவர்களுடைய வாழ்க்கை மாறிவிட்டது அவர்கள் நாட்டிற்காக விளையாடுவதை விட அதை தான் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்று கடுமையான வார்த்தையின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடாதவர்கள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார்.இதோட நிறுத்திக்கங்க... எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு; வெஸ்ட் இண்டீஸ் மீது ஆண்ட்ரியூ ரசல் காட்டம் !! 4

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இது போன்ற விமர்சனங்கள் வரும் என்பது தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஆனால் அமைதியாக இருக்க போகிறேன் என்றும் கோபமாக  பதிவிட்டிருக்கிறார்.

 

ஒரு காலகட்டத்தில் கிரிக்கெட்டில் ராஜாவாக வளம் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தற்பொழுது இது போன்ற சிக்கலில் தவித்து வருவது உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *