ஐபிஎல் ஏழம் எனக்கு முக்கியம் இல்லை இப்பொது எனக்கு முஷ்தாக் அலி கோப்பையில் வெற்றி பெருவதெ எனது நோக்கம் என்று கேரளா அணியை சேர்ந்த முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்
இந்திய அணிக்கு இன்னொரு துவக்க வீரர் கிடைத்துவிட்டார் என்று சொல்லுமளவிற்கு கேரளாவைச் சேர்ந்த முகமது அசாருதீன் முஷ்தாக் அலி லீக் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் சதம் கடந்து சாதனை படைத்துள்ளார், மொத்தம் 54 பந்துகளில் 137 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அதில் ஒன்பது பவுண்டரிகளும் 11 சிக்ஸ்களும் அடங்கும்.

ஜனவரி 13இல் மும்பைக்கு எதிரான போட்டியில் அசாருதீன் சிறப்பாக செயல்பட்டு மும்பை அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார் .
இவரின் உதவியால் கேரளா அணி 192 ரன்கள் எடுத்தது. இந்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் மும்பை அணி தோல்வியைத் தழுவியது.
இவரின் இந்த சிறப்பான செயல்பாட்டால் அனைவர் மத்தியிலும் பெரும் மதிப்பைப் பெற்றார்,
இந்நிலையில் அவரிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் ஐபிஎல் போட்டி ஏழம் தொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளார். அதற்கு அவர் எனது தற்போதைய கவனமெல்லாம் ஆந்திராவுக்கு எதிரான நான்காவது போட்டியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமெ என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

வலது கை பேட்ஸ்மேனான அசாருதீன் தனது கனவுகளாக சொந்த வீடு ஒன்று வாங்குவதையும் பென்ஸ் கார் ஒன்று வாங்குவது தான் என்று தெரிவித்துள்ளார்.இவர் வரும் காலங்களில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இவரை பாராட்டி உள்ளனர். 2023 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துவக்க வீரராக களம் காணுவார் என்றும் கூறியுள்ளனர்