கோஹ்லி ரொம்ப கோவக்காரருங்க; ரிஷப் பண்ட் ஓபன் டாக் !! 1

கோஹ்லி ரொம்ப கோவக்காரருங்க; ரிஷப் பண்ட் ஓபன் டாக்

கேப்டன் விராட் கோலியின் கோபத்தினை கண்டு தான்  அச்சப்படுவதாக இந்திய அணியின் இளம்  விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

2019 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சார்பில் ரிஷப் பண்ட் விளையாடுகிறார். 2016ம் ஆண்டுதான் முதன் முதலாக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் அவர் ரூ1.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். தற்போது நான்வது முறையாக ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் களமிறங்குகிறார்.

ரிஷப் பண்ட் கடந்த ஆண்டில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 128 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2017ம் ஆண்டில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். அதேபோல், 2016ம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். 2018 ஐபிஎல் தொடரில் அவர் 648 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தை பிடித்தார். ஒரு நாள் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடக் கூடிய வீரர் என்ற பெயரினை எடுத்துள்ளார்.

கோஹ்லி ரொம்ப கோவக்காரருங்க; ரிஷப் பண்ட் ஓபன் டாக் !! 2

இருப்பினும், விக்கெட் கீப்பிங்கை பொருத்தரவை ரிஷப் பண்ட் இன்னும் தேர்ந்த வீரராக இன்னும் உருவாகவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் தோனிக்கு பதிலாக அவர்தான் களமிறங்கினார். 4வது ஒருநாள் போட்டியில் எளிதான ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பினை ரிஷப் தவறவிட்டது இந்திய அணி தொடரை இழக்கவே காரணமாக அமைந்துவிட்டது. ரிஷப் ஸ்டம்பிங் வாய்ப்பினை கோட்டைவிட்டதை பார்த்த கேட்பன் விராட் கோலி மிகவும் அப்செட் ஆகிவிட்டார். அப்போதை அவர் காட்டிய ரியாக்‌ஷனும் வீடியோவாக வைரல் ஆனது.

இந்நிலையில், பண்ட் பேசிய வீடியோ பதிவு ஒன்றினை டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கேப்டன் விராட் கோலியின் கோபம் குறித்து பேசியுள்ளார். “யாரையும் பார்த்து நான் பயப்படுபவன் அல்ல. ஆனால், கோலியின் கோபம் என்றால் மட்டும் எனக்கும் பயமாக உள்ளது. இருப்பினும், நாம் எந்தவொரு தவறையும் செய்யாத நிலையில், அவர் ஏன் கோபம் கொல்ல வேண்டும். ஆனால், நீங்கள் ஒரு தவறு செய்தால், மற்றவர்கள் உங்கள் மீது கோபம் கொள்ளதான் செய்வார்கள். தவறுகளில் இருந்துதான் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்” என்று ரிஷப் பண்ட் அதில் பேசியியுள்ளார்.

கோஹ்லி ரொம்ப கோவக்காரருங்க; ரிஷப் பண்ட் ஓபன் டாக் !! 3

டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனது முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியுடன் மோதுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 8 மணி இந்தப் போட்டி நடைபெறுகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *