இப்ப திட்டலாம்... ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் தலைல தூக்கி வச்சி கொண்டாடி தான் ஆகனும்; ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசிய பொலார்ட் !! 1
இப்ப திட்டலாம்… ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் தலைல தூக்கி வச்சி கொண்டாடி தான் ஆகனும்; ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசிய பொலார்ட்

முன்னாள் கிரிக்கெட் வீரரான கைரன் பொலார்ட், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களாலேயே கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி வரும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

கடந்த இரண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்டியாவை, குஜராத் அணியிடம் இருந்து ட்ரேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி அவரையே தனது புதிய கேப்டனாகவும் நியமித்தது.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாக திகழ்ந்த ரோஹித் சர்மா திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாலும், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவிற்கு  கொடுக்கப்பட்டதாலும் விரக்தியடைந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள், ஹர்திக் பாண்டியா செல்லும் இடம் எல்லாம் அவருக்கு எதிராக தொடர்ந்து கூச்சலிட்டு வருகின்றனர்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டியில் விளையாடி அதில் வெறும் 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், ரசிகர்களுடன் சேர்ந்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் ஹர்திக் பாண்டியாவை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இப்ப திட்டலாம்... ஆனா இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் தலைல தூக்கி வச்சி கொண்டாடி தான் ஆகனும்; ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசிய பொலார்ட் !! 2

ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சியே மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என பலரும் ஹர்திக் பாண்டியாவை மிக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான கைரன் பொலார்ட், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இது குறித்து பொலார்ட் பேசுகையில், “கிரிக்கெட்டில் ஒரு அணியின் தோல்விக்கு தனிப்பட்ட ஒரு வீரரை மட்டும் சுட்டி காட்டி, அவரை குறை சொல்வதை பார்த்து பார்த்து நான் சலிப்படைந்துவிட்டேன். கிரிக்கெட்டில் ஒரு அணியின் வெற்றிக்கும், தோல்விக்கும் எப்பொழுதுமே ஒரு வீரர் மட்டுமே காரணமாக இருக்க மாட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விகளுக்கு ஹர்திக் பாண்டியாவை எல்லை மீறி விமர்சிப்பது ஏற்புடையது அல்ல. ஹர்திக் பாண்டியாவை இப்போது விமர்சிப்பவர்கள் அனைவரும் இன்னும் சில வாரங்களில் அவர் இந்திய அணிக்காக விளையாடும் பொழுது ஹர்திக் பாண்டியா நன்றாக விளையாட வேண்டும் என்றே எதிர்பார்ப்பார்கள். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்வார் என்பதே எனது நம்பிக்கை. மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விகளுக்கு ஹர்திக் பாண்டியாவை விமர்சிப்பதை அனைவரும் நிறுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *