நானாகத் தான் ஓய்வு கேட்டேன் : ஏன்? என விளக்கம் கொடுக்கிறார் ஆல் ரவுண்டர் பாண்டியா

இந்தியா மற்றும் இலங்கை இடையேயான 3 போட்டிகள் கொட்ன டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு நாட்களில் கொல்கத்த ஈடன் காடன் மைதானத்தில் துவங்கவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தொடர்ந்து கடுமையாக பயிற்சு செய்து வருகின்றன.

முன்னதாக இலங்கை மற்றும் இந்தியாவின் போர்ட் பிரெசிடன்ட்ஸ் லெவன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 நாள் பயிற்சி ஆட்டம் ட்ராவில் முடிந்தது.

இதற்கு முன்னர், இலங்கைத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கோலி தலைமையிலான அணி இந்த அணியில் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வழக்கமான வீர்ரகள் இடம் பெற்றிருந்தனர்.

பின்னர் நியூசிலாந்து தொடரின் இருதியில் மீண்டும் இந்திய அணி இன்னொரு முறை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும், மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் இதே அணி தான் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், சில டெஸ்ட் போட்டிகளே ஆடியுள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு ஏன் ஓய்வளிக்கபட்டது என்ற கேள்விகள் எழுப்பபட்டது. தற்போது அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.

ஹர்திக் பாண்டியா தாமாக முன்ந்து பி.சி.சி.ஐ.யிடம் ஓய்வு கேட்டுள்ளார். இதனைப் பற்றி அவர் கூறியதாவது,

உண்மையைச் சொல்லப் போனால், நானாக்த்தான் ஓய்வு கேட்டேன். என்னுடைய உடம்பு மேலும் சில டெஸ்ட் போட்டிகளுக்கு தற்போது ஒத்துழைக்கும் என எனக்குத் தெரியவில்லை. என் உடம்பிற்கு தற்போது ஓய்வு தேவைப் படுகிறது.

இவ்வளவு கிரிக்கெட் விளையாடியதனால், என்னுடைய உடம்பில் சில இடைஞ்சல்கள் ஏற்ப்பட்டுள்ளது. என்னுடைய உடம்பு முழுமையாக தேறி இருந்தால் தான் நான் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுவேன்.

எனக் கூறினார் ஹர்திக் பாண்டியா.

இந்த ஓய்வினைப் பற்றி அவர் மேலும் கூறியதாவது,

இந்த ஓய்வு கிடைத்தத்து எனக்கு அதிர்ஸ்டம் தான். இந்த ஓய்வு நேரத்தில் ஜிம்மில் பயிற்சி பெறுவேன். அடுத்து வரும் தென்னாப்பிரிக்க தொடருக்காக காத்திருக்கிறேன். அந்த தொடருக்கு இந்த ஓய்வில் தயாராவேன்.

தென்னாப்பிரிக்க தொடர்  மிக முக்கியமான தொடராகும். தென்னாப்பிரிக்கத் தொடரில் அணிக்கு பெரிய அளவில் உதவி செய்யக் காத்திருக்கிறேன். கண்டிப்பாக அருமையாக விளையாட முயற்சிப்பேன்.

எனக் கூறினார் ஹர்திக் பாண்டியா

இந்தியா-இலங்கைத் தொடரின் போட்டி அட்டவணை:

டெஸ்ட் தொடர் 
  1. முதல் போட்டி, நவ்.16-20, கொல்கத்தா
  2. இரண்டாவது போட்டி, நவ்.24-28, நாக்பூர்
  3. மூன்றாவது போட்டி, டிசம்.02-06, டெல்லி
ஒருநாள் தொடர் அட்டவணை :
  1. முதல் ஒருநாள் போட்டி, டிசம்.10, தர்மசாலா
  2. இரண்டாவது போட்டி, டிசம்.13, மொஹாலி
  3. மூன்றாவது போட்டி, டிசம்.17, விசாகப்பட்டினம்
டி20 தொடர் அட்டவணை : 
  1. முதல் டி20 போட்டி, டிசம்.20, கட்டாக்
  2. இரண்டாவது டி20 போட்டி, டிசம்.22, இந்தூர்
  3. மூன்றாவது டி20 போட்டி, டிசம்.24, மும்பை

 

Editor:

This website uses cookies.